Skip to main content

Posts

Showing posts from June, 2021

எஸ் .பி .ஐ வங்கியின் தட்கல் முறையில் டிராக்டர் கடன் வசதி வாங்க என்ன செய்யவேண்டும்

SBI Bank tractor loan scheme  இன்றய சூழ்நிலையில் விவசாயம் செய்ய ஆட்கள் பற்றாக்குறை , குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து முடிக்கவேண்டிய நிலை இது தானாகவே நம்மை டெக்னாலஜி நோக்கி திருப்பிவிட்டுள்ளது . விவசாயத்தை பொறுத்தவரை ட்ராக்டர் பலவகைகளில் நிலத்தை உழுவதிலிருந்து விவசாய பொருட்களை மற்றொரு இடத்திற்கு கொண்டு தேவைப்படுகிறது . இதனால் எஸ் .பி .ஐ வங்கி சுலபமாக டிராக்டர் வாங்க புதிதாக தட்கல் முறை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த திட்டத்திற்கான என்ன தகுதி , நண்மைகள் , என்ன கட்டணம் போன்றவற்றை பார்க்கலாம் . முதலில் நீங்கள் டிராக்டர் வாங்க போகிறீர்கள் என்றால்.எந்த நிறுவன டிராக்டர் வாங்க போகிறீர்கள் என்று முடிவு செய்து அந்த நிறுவனத்திடம் கொட்டேஷன் கேளுங்கள் . இந்த கொட்டேஷனை இரண்டு விதமா வாங்குங்கள் ஓன்று இப்பொழுது நீங்கள் மகேந்த்ரா  நிறுவனத்திடம் டிராக்டர் வாங்கினால் 2, 3 இடங்களில் கொட்டேஷன் வாங்குங்கள் , அல்லது 2, 3 நிறுவனங்களிடம் கொட்டேஷன் வாங்குங்கள்  மகேந்த்ரா, குபோட்ட , இப்படி  தட்கல் முறையில் டிராக்டர் கடன் - அம்சங்கள் மற்றும் நன்மைகள்  1. இந்த கடன் வாங்குவதற்கு எந்த அடமனமும

இயற்கை விவசாயத்தில் இனக்கவர்ச்சி பொறிகளின் பங்கு

 insect trap for agriculture இயற்கை விவசாயத்தில் பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பூச்சி பொறிகளே, இதை நம் வயலில் சரியான நேரத்தில் கையாண்டாலே பயிர்களில் 60 சதவீத தாக்கத்தை கட்டுப்படுத்தி விடலாம் . பூச்சியை  அழிக்கும் அல்லது பயிர்களை தாக்காமல் கவர்ந்து இழுப்பதற்கு இரண்டு முறைகள் உள்ளன ஓன்று  உயிரியல் முறை இது  இனக்கவர்ச்சி பயிர்களை ஊடு பயிராகவோ அல்லது வரப்பு ஓரங்களில் நட்டு முக்கிய பயிர்களை தாக்காமல் கவர்ந்து இழுப்பது . அடுத்தது கவர்ச்சி பொறிகள் வைத்து பூச்சிகளை கவர்ந்து இழுத்து அழிப்பது . நாம் இந்த கட்டுரையில்  பூச்சிகளை கட்டுப்படுத்த என்ன வகையான பொறிகள்  உள்ளன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்  இந்த பொறிகளை பொறுத்தவரை நான்கு விதமா பிரிச்சுக்கலாம்  1) நாமே தயாரிக்கும் பொறிகள்  2) ஓட்டும் அட்டைகள்  3) கவர்ச்சி பொறிகள்  4) விளக்கு பொறிகள்  1) நாமே தயாரிக்கும் பொறிகள் சில பூச்சிகளை கட்டுப்படுத்த மரபு வழி முறையை பயன்படுத்தி தயாரிப்பது உதாரணமாக காண்டாமிருக வண்டை கவர்ந்து இழுக்க கருவாட்டு பொறி , பழங்கள் மற்றும்  பந்தல் காய்கறிகளை தா

இந்தியாவில் சிறந்த பவர் டில்லர்ஸ் மற்றும் பவர் டில்லருக்கான SBI வாங்கி கடன் பற்றி பார்ப்போம்

power tiller machine விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வேளைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடியது இந்த பவர் டில்லர்களே . இவை பெருபாலும் மண்ணை நன்றாக உழ மற்றும் களை கட்டுப்படுத்த பயன்படுகிறது . இந்த பவர் டில்லர்கள் மூலம் நல்ல பொடி பொடியாவததுடன் நிலத்திற்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும் . நாம் இந்த கட்டுரையில் சிறந்த பவர் டில்லர்களையும் sbi வங்கி கொடுக்கும் டில்லருக்கான கடன் வசதி பற்றியும் பார்ப்போம் . 1. KMW Mega T15 Deluxe by Kirloskar கிர்லோஸ்கர் நிறுவனத்திலிருந்து பல வகையான பயன்பாட்டிற்காக சந்தைக்கு வந்துள்ள டில்லராகும் . இந்த டில்லர் பலவகையான அம்சங்களை கொண்டது , மொபைல் சார்ஜ் ஏத்தும் வசதி மற்றும் பவர் மீட்டர் உள்ளது. 15 குதிரை திறன் சக்தி கொண்ட இவை பண்ணை மற்றும் மானாவாரி நிலங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் உள்ளது . குறைந்த fuel-லில் அதிக வேலை செய்யக்கூடியது . சிறந்த பிரேக் வசதியும் மெட்டாலிக் கிளட்ச் உடையது . இதில் உள்ள வசதிகள் தனித்துவமானது மற்ற டில்லர்களில் எதிர்பார்க்க முடியாது  2. Honda FJ500 Power Tiller ஹோண்டா நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்ட இந்த பவர் டில்லர்  அனைத்துவிதமான  சாக

தரமான மற்றும் விலை குறைந்த அணைத்து விதமான விவசாய தேவைகளுக்கு பயன்படக்கூடிய மினி டிராக்டர்ஸ் பற்றி பார்ப்போம்

Best Mini tractors and price  100க்கும்  மேற்பட்ட விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த வாட்ஸ்அப் குரூப் - Click Here கொரோன அணைத்து விதமான மக்களிடையேயும் வாழ்வாதாரத்தில்  ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது . இரண்டு ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயி ஆகட்டும் பல ஏக்கர்  வைத்திருக்கும் பெரு விவசாயி ஆகட்டும் அனைவருமே இந்த கொரோனவால் பொருளாதார ரீதியாக பெரிய பாதிப்பு அடைந்துள்ளனர் . இந்த சூழ்நிலையில் அரசாங்கமும் மற்ற தனியார் நிறுவனங்களும்  விவசாயிகளுக்கு உதவ முன் வந்துள்ளன . அரசாங்கம் விவசாயிகளுக்காக பல திட்டங்களை செயல் படுத்திக்கொண்டிருக்கிறது . பல பெரிய நிறுவனங்களும் உதாரணமாக TAFE , சிறு ஏழை விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுவதற்கு இலவசமாக வழங்குகிறது . இன்றய காலகட்டத்தில் டிராக்டர் இல்லாமல் விவசாய வேலைகள் இருக்காது .  விவசாயிகளின் தேவைகளை பொறுத்து நிறைய நிறுவனங்கள் பலவிதமான டிராக்டர்களை சந்தைப்படுத்தியுள்ளன . இதே போல் அணைத்து விதமான விவசாய தேவைகளுக்கு மினி டிராக்டர்களை அறிமுக படுத்தியுள்ளது அவை குறைந்த விலையிலும் உள்ளன அவற்றை பற்றி இந்த கட்டுரையில்  பார்ப்போம்  1. Yuvraj-215 NXT இந்த மினி டிராக

ஒரு மணி கான வாடகை

*வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள கருவிகளும் அதன் ஒரு மணி கான வாடகை விபரங்களும்*:

ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூபாய் 340/-(டிராக்டர், உபகருவிகள் மற்றும் டீசல் உட்பட)
கீழ்க்கண்ட இயந்திரங்கள்:

1.தென்னை மட்டை தூளாக்கும் கருவி
2.விதைக்கும் கருவி
3.சோளத்தட்டை அறுவடை செய்யும் இயந்திரம்
4.செடிகள் நடும் இயந்திரம்
5.ஒன்பது கொழு கலப்பை
6.ஐந்து கொழு கலப்பை
7.வார்ப்பு இறகு கலப்பை
8.ரோட்டவேட்டர்
9.வைக்கோல் கட்டும் கருவி
10.வைக்கோல் உலர்த்தும் கருவி

பிற இயந்திரங்கள்:

1.மணல் அள்ளும் எந்திரம்/ ஜேசிபி. ரூ.660
2.திரும்பி மண் அள்ளும் இயந்திரம் உருளை பட்டை/ ஹிட்டாச்சி ரூ.1440
3.மண் தள்ளும் இயந்திரம்/புல்டோசர் ரூ.840
4.நெல் அறுவடை இயந்திரம் (சக்கரம்) ரூ. 875
5.நெல் அறுவடை
இயந்திரம்
(ரப்பர் உருளை பட்டை)
ரூ 1415

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் .

வாடகை பணத்தை அலுவலகங்களில் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.