insect trap for agriculture இயற்கை விவசாயத்தில் பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பூச்சி பொறிகளே, இதை நம் வயலில் சரியான நேரத்தில் கையாண்டாலே பயிர்களில் 60 சதவீத தாக்கத்தை கட்டுப்படுத்தி விடலாம் . பூச்சியை அழிக்கும் அல்லது பயிர்களை தாக்காமல் கவர்ந்து இழுப்பதற்கு இரண்டு முறைகள் உள்ளன ஓன்று உயிரியல் முறை இது இனக்கவர்ச்சி பயிர்களை ஊடு பயிராகவோ அல்லது வரப்பு ஓரங்களில் நட்டு முக்கிய பயிர்களை தாக்காமல் கவர்ந்து இழுப்பது . அடுத்தது கவர்ச்சி பொறிகள் வைத்து பூச்சிகளை கவர்ந்து இழுத்து அழிப்பது . நாம் இந்த கட்டுரையில் பூச்சிகளை கட்டுப்படுத்த என்ன வகையான பொறிகள் உள்ளன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம் இந்த பொறிகளை பொறுத்தவரை நான்கு விதமா பிரிச்சுக்கலாம் 1) நாமே தயாரிக்கும் பொறிகள் 2) ஓட்டும் அட்டைகள் 3) கவர்ச்சி பொறிகள் 4) விளக்கு பொறிகள் 1) நாமே தயாரிக்கும் பொறிகள் சில பூச்சிகளை கட்டுப்படுத்த மரபு வழி முறையை பயன்படுத்தி தயாரிப்பது உதாரணமாக காண்டாமிருக வண்டை கவர்ந்து இழுக்க கருவாட்டு பொறி , பழங்கள் மற்றும் பந்தல் காய்கறிகளை தா
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை , பண்ணை இயந்திரங்கள் பற்றிய விவரங்கள்