Soil Moisture Meter நாம் எதற்காக இந்த ஈரப்பதம் கண்டறிவதற்கான கருவி வைத்திருக்கவேண்டும் இந்த கேள்வி கேட்பதற்கு முன் இந்த கருவி எந்தவிதமான பயிர்களுக்கு பயன்படும் பாப்போம் . பொதுவாக விவசாய பயிர்களுக்கு தேவைபடாது ஏன் எனில் நெல் போன்ற பயிர்களை நாம் தண்ணீரில்தான் வைத்திருப்போம் அதுவே மானாவாரி பயிர்களாக இருந்தால் இதன் பயன்பாடு தேவை இருக்கும் . அடுத்து தோட்டக்கலை பயிர்கள் இதற்கு இந்த கருவி கொஞ்சம் அதிகம் தேவைப்படும் . தென்னை மரத்தை எடுத்து கொண்டால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சோதனை செய்து ஈரப்பததின் அளவை பொறுத்து நீர் விடலாம் . நீங்கள் மாடி தோட்டம் வைத்திருந்தால் இதன் பயன்பாடு மிக உதவியாக இருக்கும் நாம் பெரும்பாலும் பைகளிலோ அல்லது தொட்டிகளிலோதான் வைத்திருப்போம் . தொட்டியில் மேலே காய்ந்து இருந்தாலும் அடியில் ஈரம் இருக்க வாய்ப்புண்டு நீங்கள் அதிகமான நீர் விடும்போது செடிகள் பாதிக்க வாய்ப்புண்டு. எனவே நம்மிடம் இந்த மீட்டர் இருந்தால் உதவியாக இருக்கும் . ஒரு பயிரை பொறுத்தவரை அதன் வேர்பகுதியில்தான் ஈரம் தேவையான அளவு இருக்கவேண்டும் . மேலும் தேவையான அளவு நீர் விடுவதால் ஒரு குறிப்பிட்ட அளவு நீர
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை , பண்ணை இயந்திரங்கள் பற்றிய விவரங்கள்