Skip to main content

Posts

களை எடுக்கும் கருவிகள் Part-2

 Weeder Tools Power  நம் வயலில் உள்ள களைகளை ஏன் நம்மால் இன்று வரை கட்டுப்படுத்த முடியவில்லை எப்படி அழிக்க அழிக்க  முளைத்துக்கொண்டே இருக்கின்றன . இதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் இரண்டு காரணங்களை குறிப்பிட்டு சொல்லலாம் . ஒரு களை செடியின் வாழ் நாள் 3 மாதம் என்று வைத்துக்கொள்வோம் அந்த மூன்று மாதமும் வாழ்ந்து அது மடியும் போது அதன் விதைகளை ஆயிர கணக்கில் பரப்பி இருக்கும் . இது முதல் கரணம் என்றால் இப்படி பரப்பப்படும் விதைகள் எல்லாம் ஒரே நேரத்தில் முளைப்பதில்லை சில விதைகள் உரக்க நிலையில் இருந்து விடுபட 1 மாதம்  ஆகலாம் , 1 வருடம் ஆகலாம் 10 வருடம் கூட ஆகலாம் ஏன் சில விதைகள் உரக்க நிலையிலிருந்து விடுபட 100 ஆண்டுகள் கூட எடுத்துக்கொள்ளும் . இதனால்தான் களைகள் நம் நிலத்தில் எப்பொழுதுமே முளைத்து கொண்டிருகின்றன .  போன பகுதியில் மேனுவல் வீடர்பற்றி பார்த்தோம்  இந்த பகுதியில் பவர் வீடர்  பற்றி பார்ப்போம் . களை எடுக்கும் கருவிகள் Part-1 பவர் வீடர் இந்தவகை வீடர்கள் பெரிய அளவு உள்ள நிலங்களுக்கு அதிக இடைவெளி உள்ள பயிர்களுக்கு தோட்டக்கலை பயிர்களுக்கும் பயன்படுத்தப்ப...

களை எடுக்கும் கருவிகள் Part-1

 Weeder Tools Manual  களை நம்மால் தடுக்கவும் முடியாது அதை கட்டுப்படுத்தவும் முடியாது . களைகள் முளைப்பதை மட்டும் நம்மால் ஓரளவுக்கு தள்ளி போடமுடியும் . இயற்கை அல்லது செயற்கை களைக்கொல்லி தெளித்து கட்டுப்படுத்த முடியும் என்றாலும் அதில் நிலம் வளம் இழந்து போக வாய்ப்புள்ளது (இயற்கை களைக்கொல்லியில் வாய்ப்பு குறைவே என்றாலும் அடிக்கடி தெளித்தால் அதன் மூலமும் நிலம் வளம் குறையலாம் )  What's App Group Link - Click Here ஆகவே நீங்கள் களையை கட்டுப்படுத்த எடுக்க வேண்டியது களையெடுக்கும் கருவிகள் அதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம் . களை கட்டுப்பாட்டை மூன்று விதமாக பிரிக்கலாம் விவசாயப்பயிர்கள் , தோட்டக்கலை பயிர்கள் , வீட்டு அல்லது மாடித்தோட்டம் . இந்த மூன்றில் எதற்கு கீழ் நீங்கள் வருவீர்கள் என்று பார்த்து நீங்கள் களை எடுக்கும் கருவிகளை வாங்கலாம் . களை எடுக்கும் கருவிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம்  1) மேனுவல் வீடர்   2) பவர் வீடர்  1) மேனுவல் வீடர் A)  Hand Weeder இந்தவகை வீடர்கள் பெரும்பாலும் வீட்டுத்தோட்டம் அல்லது மாட்டித்தோட்டத்தில் உள்ள களைகளை வேருடன் எ...

தெளிப்பான்கள் வகைகள்

 Types of sprayers இன்றைய விவசாயத்தில் தவிர்க்க முடியாத சொல் ஸ்ப்ரேயர்ஸ் (தெளிப்பான்கள்) ஒரு பூச்சி நோய் கட்டுப்படுத்துவதிலாகட்டும் , இயற்கை இடுபொருட்கள் கொடுப்பதிலாகட்டும் வயல் வெளியாகட்டும் மரங்கள் நிறைந்த தோட்டங்களாக இருந்தாலும் இந்த தெளிப்பான்களின் பங்கு மிக முக்கியமானது . இந்த தெளிப்பான்களை பொறுத்தவரை நிறைய வகைகள் உள்ளன அதிலும் பேட்டரியில் இயங்கக்கூடியவை பெட்ரோல் மற்றும் டீசல் வகை தெளிப்பான்களும் உள்ளன .  நீங்கள் ஒரு ஸ்ப்ரேயர் வாங்க முடிவெடுத்துவிட்டால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன வகையான ஸ்ப்ரேயர்வாங்கவேண்டும் என்பதுதான். நீங்கள் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தால் அதில் தானிய பயிர் செய்தால் அதற்கு பேட்டரி ஸ்ப்ரேயரே போதும் அதுவே 5 ஏக்கராக இருந்தால் பவர் ஸ்ப்ரேயர் தேவைப்படும் அதுவே மா சப்போட்டா போன்ற தோட்டக்கலை பயிராக இருந்தால் ராக்கர் ஸ்ப்ரேயர் பயன் படுத்தலாம் Agriculture Whats App Group Link  Agriculture Contacts   நாப் சாக் ஸ்ப்ரேயர் (  Knapsack sprayer) இந்தவகை ஸ்ப்ரேயரில் இரண்டு வகை உள்ளது ஓன்று மேனுவல் மற்றொன்று பவர் தெளிப்பான்கள் வீட்டுத்த...

கலப்பைகள் அதன் பயன்பாடும்

types of plow தக தகன்னு கோடை ஆரம்பித்து விட்டது  ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கோடை மழையும் ஆரம்பித்துவிட்டது. ஒரு 20 வருடத்திற்கு முன்னாள் மாடும் கலப்பையும் வைத்து உழுதுகொண்டிருந்தோம் இன்று அனைத்துமே மெஷினரிஸ் ஆகிவிட்டது. நாம் இந்த கட்டுரையில் சில கலப்பைகளையும் அதன் பயன்பாடுகளையும் பற்றி பார்ப்போம்.    மோல்டு போர்டு கலப்பை (இறகு வார்ப்பு கலப்பை ) இந்த கலப்பை தரையில் இருந்து ஒரு உத்தேசமா 45 cm உள்ள மண்ணை தோண்டி குறைந்தபச்சம் 2 அடி தள்ளி பக்கவாட்டு பகுதியில் போடும் . கலப்பை போகும்போது தோண்டக்கூடிய மண்ணை அது இறகு மாதிரி இருக்கக்கூடிய அதன் பக்கவாட்டுப்பகுதியில் குவிந்து ஒரு இரண்டடி தள்ளி போய் விழும் அப்படி விழும் மண் 45 cm ஆழத்தில் இருக்கும் மண் பிரண்டு விழும் இப்படி செய்யும் பொழுது மண் பொலபொலப்பு ஆகுறதன்மையும் அடுத்த விவசாயத்திற்கான எளிய தன்மையும் கிடைக்கும் . உளி கலப்பை  பூமிக்கடியில் உள்ள கிட்டத்தட்ட 2 அடியில் உள்ள மண் செட்டாகி செட்டாகி உள்ள மண் ஒரு தகடு மாதிரி இருக்கும் அதை முழு அளவு நகர்த்தாமல் மண்ணை உடைக்கிறது என்பது உளிகலப்பை  சட்டிக்கலப்பை  இந்த சட...

மண் ஈரப்பதம் கண்டறிவதற்கான கருவி - Soil Moisture Meter

Soil Moisture Meter நாம் எதற்காக இந்த ஈரப்பதம் கண்டறிவதற்கான கருவி வைத்திருக்கவேண்டும் இந்த கேள்வி கேட்பதற்கு முன் இந்த கருவி எந்தவிதமான பயிர்களுக்கு பயன்படும் பாப்போம் . பொதுவாக விவசாய பயிர்களுக்கு தேவைபடாது ஏன் எனில் நெல் போன்ற பயிர்களை நாம் தண்ணீரில்தான் வைத்திருப்போம் அதுவே மானாவாரி பயிர்களாக இருந்தால் இதன் பயன்பாடு தேவை இருக்கும் .  அடுத்து தோட்டக்கலை பயிர்கள் இதற்கு இந்த கருவி கொஞ்சம் அதிகம் தேவைப்படும் . தென்னை மரத்தை எடுத்து கொண்டால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சோதனை செய்து ஈரப்பததின் அளவை பொறுத்து நீர் விடலாம் . நீங்கள் மாடி தோட்டம் வைத்திருந்தால் இதன் பயன்பாடு மிக உதவியாக இருக்கும் நாம் பெரும்பாலும் பைகளிலோ அல்லது தொட்டிகளிலோதான் வைத்திருப்போம் . தொட்டியில் மேலே காய்ந்து இருந்தாலும் அடியில் ஈரம் இருக்க வாய்ப்புண்டு நீங்கள் அதிகமான நீர் விடும்போது செடிகள் பாதிக்க வாய்ப்புண்டு. எனவே நம்மிடம் இந்த மீட்டர் இருந்தால் உதவியாக இருக்கும் . ஒரு பயிரை பொறுத்தவரை அதன் வேர்பகுதியில்தான் ஈரம் தேவையான அளவு இருக்கவேண்டும் . மேலும் தேவையான அளவு நீர் விடுவதால் ஒரு குறிப்பிட்ட அளவு...

விவசாயத்தில் ட்ரோன்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன

how are drones used in agriculture Agriculture Drones Part 2 போன பகுதியில் விவசாயத்தில் ட்ரோன் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி பார்த்தோம் இந்த பகுதியில் விவசாயத்தில் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை பற்றிப்பார்ப்போம் .   ஒரு புதிய டெக்னாலஜியை நோக்கி நாம் போகிறோம் என்றால் நேரம் மற்றும் ஆட்கள் பற்றாக்குறைதான் காரணமாக இருக்கும் . அடுத்த பத்து ஆண்டுகளில் இது இன்னும் அதிகரிக்கும் அப்பொழுது நாம் முழுக்க டெக்னாலஜியை நம்பியிருக்க வேண்டிவரும் . அந்த புதிய தொழில் நுட்பத்தில் ஒன்றுதான் இந்த ட்ரோன்கள் . தற்சமயம் இந்த ட்ரோன்கள் முக்கியமான விசயத்திற்க்காக பயன்படுத்தப்படுகிறது  1) மண் மற்றும் கள ஆய்வு நாம் பயிர் செய்யும் பயிர்களின் வளர்ச்சியை முதலில் இருந்து கண்காணிக்கலாம் .  3D வரைபடங்களைப் பெறுவதன் மூலம். மண்ணின் தரம் மற்றும் ஊட்டச்சத்தை கண்காணிக்கலாம் . இந்த தரவுகளை வைத்துக்கொண்டு அடுத்து அது என்ன பயிர் செய்யலாம் என்பதை நாம் முடிவு செய்யலாம் .  2) விதை விதைத்தல்  இது ட்ரோனில் உள்ள புதிய முறையாகும் இன்னும் நம் நாட்டிற்கு இன்னும் அதிகமாக பயன் படுத்த ஆரம்பிக்கவில்லை ஆனால...

poultry feed machine

கோழி தீவன உற்பத்தி இயந்திரம்  கோழி வளர்ப்பு முக்கியமான ஒன்று நல்ல தரமான தீவனம் . நீங்கள் கொடுக்க போகும் தீவனம்  உங்கள் கோழியை எடையை அதிகரிக்க செய்யும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் , முட்டையிடும் திறனை அதிகரிக்கும் . ஒரு  கோழி பண்ணை லாபமா நஷ்டமா என்பதை தீர்மானிக்க கூடிய இடத்தில் இருப்பது இந்த தீவனம்  . நாம் ஏன் தீவன உற்பத்தி வாங்கவேண்டும்   1) நாம் கோழி பண்ணையின் தீவன செலவை குறைக்கலாம்  2) நாமே தீவனத்தை உற்பத்தி செய்து விற்கலாம் அதுவும் ஆர்கனிக்காக தீவனத்தை உற்பத்தி செய்யும்போது விலை இன்னும் அதிகம் போகும்  கோழிகளுக்கு உணவு இயற்கையான மேய்ச்சல் முறையில் கொடுக்கலாம் அல்லது நீங்களே மூலப்பொருட்களை வாங்கி அல்லது உற்பத்தி செய்து கொடுக்கலாம் . அதை மூன்று விதமாக கொடுக்கலாம் வேகவைத்த உணவு (MASH FEED) நொறுங்கிய உணவு (CRUMBLE FEED ) உருண்டை உணவு (PELLET FEED) நாம் இந்த கட்டுரையில் கோழி தீவனத்தை தயாரிக்க கூடிய இயந்திரங்களை பற்றி பார்ப்போம்  1 )Manual Poultry Feed Making Machine ₹ 1 Lakh/ Piece Usage/Application Poultry Feed Making Automation Grade...

ஒரு மணி கான வாடகை

*வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள கருவிகளும் அதன் ஒரு மணி கான வாடகை விபரங்களும்*:

ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூபாய் 340/-(டிராக்டர், உபகருவிகள் மற்றும் டீசல் உட்பட)
கீழ்க்கண்ட இயந்திரங்கள்:

1.தென்னை மட்டை தூளாக்கும் கருவி
2.விதைக்கும் கருவி
3.சோளத்தட்டை அறுவடை செய்யும் இயந்திரம்
4.செடிகள் நடும் இயந்திரம்
5.ஒன்பது கொழு கலப்பை
6.ஐந்து கொழு கலப்பை
7.வார்ப்பு இறகு கலப்பை
8.ரோட்டவேட்டர்
9.வைக்கோல் கட்டும் கருவி
10.வைக்கோல் உலர்த்தும் கருவி

பிற இயந்திரங்கள்:

1.மணல் அள்ளும் எந்திரம்/ ஜேசிபி. ரூ.660
2.திரும்பி மண் அள்ளும் இயந்திரம் உருளை பட்டை/ ஹிட்டாச்சி ரூ.1440
3.மண் தள்ளும் இயந்திரம்/புல்டோசர் ரூ.840
4.நெல் அறுவடை இயந்திரம் (சக்கரம்) ரூ. 875
5.நெல் அறுவடை
இயந்திரம்
(ரப்பர் உருளை பட்டை)
ரூ 1415

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் .

வாடகை பணத்தை அலுவலகங்களில் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.