SBI Bank tractor loan scheme
இன்றய சூழ்நிலையில் விவசாயம் செய்ய ஆட்கள் பற்றாக்குறை , குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து முடிக்கவேண்டிய நிலை இது தானாகவே நம்மை டெக்னாலஜி நோக்கி திருப்பிவிட்டுள்ளது . விவசாயத்தை பொறுத்தவரை ட்ராக்டர் பலவகைகளில் நிலத்தை உழுவதிலிருந்து விவசாய பொருட்களை மற்றொரு இடத்திற்கு கொண்டு தேவைப்படுகிறது . இதனால் எஸ் .பி .ஐ வங்கி சுலபமாக டிராக்டர் வாங்க புதிதாக தட்கல் முறை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த திட்டத்திற்கான என்ன தகுதி , நண்மைகள் , என்ன கட்டணம் போன்றவற்றை பார்க்கலாம் .
முதலில் நீங்கள் டிராக்டர் வாங்க போகிறீர்கள் என்றால்.எந்த நிறுவன டிராக்டர் வாங்க போகிறீர்கள் என்று முடிவு செய்து அந்த நிறுவனத்திடம் கொட்டேஷன் கேளுங்கள் . இந்த கொட்டேஷனை இரண்டு விதமா வாங்குங்கள் ஓன்று இப்பொழுது நீங்கள் மகேந்த்ரா நிறுவனத்திடம் டிராக்டர் வாங்கினால் 2, 3 இடங்களில் கொட்டேஷன் வாங்குங்கள் , அல்லது 2, 3 நிறுவனங்களிடம் கொட்டேஷன் வாங்குங்கள் மகேந்த்ரா, குபோட்ட , இப்படி
தட்கல் முறையில் டிராக்டர் கடன் - அம்சங்கள் மற்றும் நன்மைகள்
1. இந்த கடன் வாங்குவதற்கு எந்த அடமனமும் வைக்கத்தேவை இல்லை
2. 48 மணி நேரத்தில் கடன் வழங்குவதற்கான நடவெடிக்கை எடுக்கப்படும்
3. இலவசமாக 4 லச்சம் வரை விபத்து காப்பீடு வழங்கப்படும்
4. வட்டி விகிதம் மிக குறைவு
5. இதற்கான செலவு கட்டணம் இல்லை
6. 1 , 3 , 4 மாதத்திற்கு ஒரு முறை கடனை திருப்பி செலுத்தலாம்
7. Collateral Security Lien on TDR accepted as margin money
8 . Margin Minimum 25% of the cost of tractor including insurance and registration charges.
9. மார்ஜின் (%) - 25
10. Effective interest rate (% p.a.) - 11.20
11. மார்ஜின் (%) - 35
12. Effective interest rate (% p.a.) - 10.95
13. மார்ஜின் (%) - 50
14 . Effective interest rate (% p.a.) - 10.55
தவணைக்காலம்
48 மாதத்தில் இந்த திட்டத்தின் கீழ் செலுத்தும் காலமாகும் , மற்ற டிராக்டர் கடன் வசதிகளில் 60 மாதத்தில் திரும்ப செலுத்தவேண்டும். செலுத்த தாமதமானால் 1% p .a , தவணை கட்ட தவறினால் 562 RS கட்டணமாக வசூலிக்கப்படும்
தட்கல் முறையில் டிராக்டர் கடன் வசதி வாங்க தகுதி
குறைந்தது 2 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் வாங்கலாம் . தனியாகவோ அல்லது குழுவாகவோ வாங்கலாம் .
என்ன ஆவணங்கள் தேவை
1) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
2) 3, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
3) அடையாள அட்டை - ஆதார் , ஓட்டுநர் உரிமம் , பான் கார்டு , பாஸ்போர்ட் , வோட்டர் id
4) முகவரி ஆதாரம் - ஆதார் , ஓட்டுநர் உரிமம் , பான் கார்டு , பாஸ்போர்ட் , வோட்டர் id
5) நீங்கள் நிலம் வைத்திருப்பதற்கான ஆதாரம்
6) எந்த கம்பெனியில் டிராக்டர் வாங்க போகிறீர்களோ அந்த நிறுவனத்தின் கொட்டேஷன் .
G.M
Smart Vivasayi
Application formet pls shar me
ReplyDelete