Skip to main content

Posts

agriculture tractor loan subsidy

 விவசாய டிராக்டர் கடன் மற்றும் மானியம் இன்றைய வேகமான உலகத்தில் இயந்திரமயமாக்கல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது அது விவசாயத்தையும் விட்டுவைக்கவில்லை இதற்கு முக்கிய காரணம் ஆட்கள் பற்றாக்குறைதான் . அதேசமயம் டிராக்டர் வாடகை என்பது சற்று கூடுதல்தான் இது அரசாங்க வாடகை தவிர்த்து தனியாரிடம் போகும்போது , ஏன் எனில் அரசாங்க வாடகை இயந்திரங்கள் நமக்கு சில சமயங்களில் தேவை படும்போது கிடைப்பதில்லை . இந்த செலவிற்கெல்லாம் நாமே ஒரு டிராக்டர் வாங்கிவிடலாம் என்று தோன்றும் . இந்த கட்டுரையில் டிராக்டர் வாங்க என்ன வகையான கடன் வசதி உள்ளது எந்த வங்கியில் உள்ளது சப்சிடி உள்ளதா என்பதை பார்ப்போம்  SBI Farm mechanization Loan நீங்கள் டிராக்டர் வாங்க வேண்டும் அதுவும் லோன் போட்டு வாங்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் SBI வங்கியை தவிர்க்க முடியாது . ஏன் எனில் இந்த வங்கியில்தான் டிராக்டர் வாங்குவதற்கென நான்கு விதமான கடன்கள் தருகிறார்கள்  1) Stree Shakti Tractor Loan(Mortgage free) இந்த டிராக்டர் கடன் வசதி பெண்களுக்கானது . யார் வாங்குகிறீர்களா அவர்கள் பெயரில் குறைந்தது 2 ஏக்கர் நிலம் இருக்கவேண்டும் வருடாந்த

இந்தியாவில் உள்ள முதல் 7 டிராக்டர்களை பார்ப்போம்

இந்தியாவில் உள்ள விவசாயத்தை பொறுத்தவரை டிராக்டர் என்பது தவிர்க்க முடியதாகிவிட்டது ,  விவசாயத்தின் பலவிதமான வேலைகளுக்கு தேவைப்படுகிறது . இன்றய தேதியில் நிறைய டிராக்டர் கம்பெனிகள் உள்ளன . (20HP  முதல்  80 HP  வரை ) இதில் நாம் 70 குதிரை திறன் கீழ் இருக்கும் டிராக்டர் மற்றும் கம்பெனிகளை பற்றி பார்ப்போம்  மஹிந்திரா மற்றும் மஹிந்திரா டிராக்டர்கள் ஒரு சாதாரண ஆளாக இருந்தாலும் அல்லது விவசாயியாக இருந்தாலும் டிராக்டர் என்றவுடன் முதலில் நினைவுக்கு  வருவது மஹிந்திராதான் .  பல வருடங்களாகளுக்கு  மேலாக விவசாயம் சார்ந்த உபகரணங்களை தயாரித்து வருகிறார்கள் . இந்நிறுவனம் J.C  மஹிந்திரா மற்றும் K.C மஹிந்திராவால்  ஆரம்பிக்கப்பட்டது . மஹிந்திரா இவ்வளவு பிரபலமாக உள்ளதற்கு அதிக செயல்திறன் மற்றும் உழைக்கும் காலம் அதிகமாக இருப்பதால்  மஹிந்திரா YUVRAJ 215 NXT ( 20HP) மஹிந்திரா JIVO 245 DI 4WD (21 - 30 HP) மஹிந்திரா  YUVO 265 DI (31 - 40 HP) மஹிந்திரா YUVO 475 DI (41 - 50 HP) மஹிந்திரா 555 Power Plus (50 HP Plus) TAFE - Tractor and Farm Equipment Ltd TAFE  நிறுவனத்தை 1960 ல் R. Anantha Ramakrishnan என்பவரால் நிறுவப

அக்ரிகல்ச்சர் ட்ரோன்ஸ் Part-1

Agriculture Drones Part 1 கடந்த சில வருடங்களாக  ட்ரோன்களின்  பயன்பாடு விவசாயத்தில் அதிகரித்து வருகிறது . இதற்கு காரணம் என்று பார்த்தால் ஆட்கள் பற்றாக்குறை , நேரம் போன்றவற்றை சொல்லலாம் . ட்ரோன்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்  👉 பூச்சி விரட்டிகளை தெளிக்கும்போது , சுழன்று வேகமாக தெளிக்கும் , இதனால் மருந்து இலைகள் மீது  பரவி நீர் துளிகளாக தேங்கி செடியினுள் இறங்கும்  👉 கை தெளிப்பான் அல்லது மற்ற தெளிப்பான்களை பயன்படுத்தும்போது பூச்சி விரட்டிகள் அதிகம் வீணாகிறது . அதே சமயம் ட்ரோன்ஸ் பயன்படுத்தும்போது கிட்டத்தட்ட முப்பது சதவீதம் வீணாவது தடுக்கப்படுகிறது. இதுவே பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும்போது நிலம் பாதிக்கப்படுவது தடுக்கிறது . மழை பெய்யும்போது அவை நீரில் அடித்து செல்வது குறைகிறது , இதனால் உயிர் சூழ்நிலை பதுக்கப்படுகிறது . 👉 அணைத்து செடிகளுக்கும் ஒரே மாதிரி ஒரே அளவாக தெளிக்கப்படும். இதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அல்லது தடை சென்சார் மூலம் உணரப்பட்டு தெளிப்பது தானாகவே நின்றுவிடும் . 👉 செயல் படுத்துவது மற்றும் பயன்படுத்துவது சுலபமானதாக இருக்கும்  👉 ட்ரோன்கள் மூலம் நேரம் அதிகம் மிச்சம

முதல் பத்து குறைந்த விலையில் வாங்க கூடிய டிராக்டர் விலை மற்றும் விவரங்கள்

Top ten lowest priced tractor prices and details இன்றய சூழ்நிலையில் விவசாயத்திற்கு  டிராக்டர் ஒரு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது . உழுவதற்கு , வரப்பு கட்டுவதற்கு , நடுவதற்கு விவசாய பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல  இப்படி அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது . ஆனால் , நம் நாட்டில் நிறைய விவசாயிகளிடம் டிராக்டர் இல்லை காரணம் பொருளாதாரம் . அதேசமயம் பல விவசாயிகள் டிராக்டர்கள் விலை உயர்ந்தவை நம்மால் வாங்க முடியாது என்ற எண்ணமும் இருக்கலாம் . இன்றய சந்தையில் குறைந்த விலையில் ட்ராக்டர்கள் விற்பனைக்கு உள்ளன அவற்றை பற்றி பார்ப்போம் . சோனாலிகா டிஐ 734 (எஸ் 1) சோனாலிகா டிஐ 734 மிகவும் வலுவான இன்ஜினை  கொண்டுள்ளது, இது டிராக்டரை மிகவும் திறமையாகவும் எரிபொருள் சிக்கனமாகவும் இருக்கிறது . இந்த டிராக்டர் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டது மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்றது. எனவே, நீங்கள் 5 லட்சத்துக்கு கீழ் ஒரு டிராக்டர் வாங்க விரும்பினால், இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். Cost – Rs 4.92 lakh*. Hp - 34 hp https://www.sonalika.com/ மஹிந்திரா 265 டி.ஐ. மஹிந்திரா 265 டிஐ 30 ஹெச்பி பிரிவி

ஒரு மணி கான வாடகை

*வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள கருவிகளும் அதன் ஒரு மணி கான வாடகை விபரங்களும்*:

ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூபாய் 340/-(டிராக்டர், உபகருவிகள் மற்றும் டீசல் உட்பட)
கீழ்க்கண்ட இயந்திரங்கள்:

1.தென்னை மட்டை தூளாக்கும் கருவி
2.விதைக்கும் கருவி
3.சோளத்தட்டை அறுவடை செய்யும் இயந்திரம்
4.செடிகள் நடும் இயந்திரம்
5.ஒன்பது கொழு கலப்பை
6.ஐந்து கொழு கலப்பை
7.வார்ப்பு இறகு கலப்பை
8.ரோட்டவேட்டர்
9.வைக்கோல் கட்டும் கருவி
10.வைக்கோல் உலர்த்தும் கருவி

பிற இயந்திரங்கள்:

1.மணல் அள்ளும் எந்திரம்/ ஜேசிபி. ரூ.660
2.திரும்பி மண் அள்ளும் இயந்திரம் உருளை பட்டை/ ஹிட்டாச்சி ரூ.1440
3.மண் தள்ளும் இயந்திரம்/புல்டோசர் ரூ.840
4.நெல் அறுவடை இயந்திரம் (சக்கரம்) ரூ. 875
5.நெல் அறுவடை
இயந்திரம்
(ரப்பர் உருளை பட்டை)
ரூ 1415

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் .

வாடகை பணத்தை அலுவலகங்களில் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.