விவசாய டிராக்டர் கடன் மற்றும் மானியம்
இன்றைய வேகமான உலகத்தில் இயந்திரமயமாக்கல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது அது விவசாயத்தையும் விட்டுவைக்கவில்லை இதற்கு முக்கிய காரணம் ஆட்கள் பற்றாக்குறைதான் . அதேசமயம் டிராக்டர் வாடகை என்பது சற்று கூடுதல்தான் இது அரசாங்க வாடகை தவிர்த்து தனியாரிடம் போகும்போது , ஏன் எனில் அரசாங்க வாடகை இயந்திரங்கள் நமக்கு சில சமயங்களில் தேவை படும்போது கிடைப்பதில்லை .
இந்த செலவிற்கெல்லாம் நாமே ஒரு டிராக்டர் வாங்கிவிடலாம் என்று தோன்றும் . இந்த கட்டுரையில் டிராக்டர் வாங்க என்ன வகையான கடன் வசதி உள்ளது எந்த வங்கியில் உள்ளது சப்சிடி உள்ளதா என்பதை பார்ப்போம்
SBI Farm mechanization Loan
நீங்கள் டிராக்டர் வாங்க வேண்டும் அதுவும் லோன் போட்டு வாங்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் SBI வங்கியை தவிர்க்க முடியாது . ஏன் எனில் இந்த வங்கியில்தான் டிராக்டர் வாங்குவதற்கென நான்கு விதமான கடன்கள் தருகிறார்கள்
1) Stree Shakti Tractor Loan(Mortgage free)
இந்த டிராக்டர் கடன் வசதி பெண்களுக்கானது . யார் வாங்குகிறீர்களா அவர்கள் பெயரில் குறைந்தது 2 ஏக்கர் நிலம் இருக்கவேண்டும் வருடாந்திர வருமானம் 1.50000 இருக்கவேண்டும் .
இந்த கடன் வசதியில் பெண்களுக்காக குறைந்த வட்டி விகிதம் மற்றும் நீங்கள் அப்ளை செய்த மூன்று நாட்களில் பணம் கிடைத்துவிடும் . வருடத்திற்கு 11.20% மாதம் மாதம் கடனை திரும்ப செலுத்தும் வசதி உண்டு . மொத கடனை திரும்ப செலுத்தும் காலம் 36 மாதங்களாகும்
2) Stree Shakti Tractor Loan-Liquid Collateral
இந்த கடன் வசதி நீங்கள் டிராக்டர் வாங்குவதற்காக தங்க நகைகளை வைத்து கொடுக்கப்படுவதாகும் இதற்கும் 2 ஏக்கர் நிலம் இருக்கவேண்டும் மற்றும் வருடாந்திர வருமானம் 1.50000 இருக்கவேண்டும்
10.95 வருடத்திற்கு வட்டி விகிதம் மாதம் மாதம் கடனை திரும்ப செலுத்தும் வசதி உண்டு. மொத்தமாக கடனை த்ரிரும்ப செலுத்தும் காலம் 46 மாதங்களாகும்
Processing charges and fees
Documents required
3) Modified New Tractor Loan Scheme
குறைந்தது 2 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும் . தனியாகவோ அல்லது குழுவாகவோ கடன் வாங்கலாம் . ஒரு லச்சத்திற்குள் கடன் வாங்கினால் எதுவும் தேவை இல்லை அதற்கு மேல் வாங்கினால் உங்கள் நிலத்தை அடமானமாக காண்பிக்கவேண்டும் அல்லது உங்களுக்காக யாராவது கையெழுத்து போடா வேண்டும் . இதற்கு கட்டணமாக .50% உங்கள் லோனிலிருந்து கழித்து கொள்வார்கள் . வருடாந்திர வட்டி விகிதம் 2% இருக்கும் .
4) Tatkal Tractor Loan
குறைந்தது 2 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். விவசாயியாகவோ அல்லது தனி நபராகவோ இருக்கலாம் . இன்சூரன்ஸ் , பதிவுக்கட்டணம் அணைத்து சேர்த்து 100 சதவீதம் கடன் கொடுக்கப்படும் .
Interest Rate
கடனை திரும்ப செலுத்தும் காலம் 48 முத்த 60 மாதங்கள் வரை இருக்கும்
Documents
icici Bank Tractor loan
வேகமாக டிராக்டர் லோன் கிடைத்துவிடும் . கடனை 5 வருடத்திற்குள் திரும்ப செலுத்திவிடலாம் . இந்த லோன் வாங்குவதற்கு குறைந்தது 3 ஏக்கர் கடன் வாங்குபவர்கள் பெயரில் இருக்கவேண்டும்
Documentation
டிராக்டர் மானியங்கள் தமிழ்நாடு
மானியங்கள் பற்றிய அறிவிப்புகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும் அதுவும் வேளாண்மை பொரியல் துறை சார்பில் அறிவிக்கப்படும் அப்பொழுது அருகில் உள்ள வேளாண்மை துறையை அணுகவேண்டும் டிராக்டர் மட்டுமின்றி மற்ற இயந்திரங்களுக்கு மானியங்கள் கிடைக்கும்
மேலும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் அதிலும் முன் வருவப்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்
Comments
Post a Comment