Skip to main content

இந்தியாவில் கிடைக்கும் ஏ .சி வசதியுள்ள டிராக்டர்களை பற்றி பார்ப்போம்

Top Five Aircon Tractors sales Information 



சந்தேகமே இல்லாமல் இந்தியா விவசாய நாடு , இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்க கூடியது விவசாயம் . ஆகவே இந்தியாவின் விவசாய சந்தையை மையப்படுத்தி பல்வேறு  டெக்னாலஜி பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு விவசாயம் சார்ந்த வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன அவை பெருமளவு விவசாயிகளின் பணிச்சுமையை குறைத்து வருகின்றன . அதே சமயம் ஒரு சில தயாரிப்புகள் நாம் குளு குளு வேலை பார்ப்பதற்காக தயாரிக்க பட்டுள்ளன . உண்மைதான் சொகுசு கார்களில் இருப்பதுபோல் ட்ராக்டர்களிலும் குளு குளு வசதி வந்துவிட்டது ( 5 லச்ச ரூபாய்க்கு சாதாரண டிராக்டர் வாங்கவே நமக்கு வழியில்லை என்று நீங்கள் நினைப்பது புரிகிறது .) இருந்தாலும் விவசாயிகளின் வாழ்க்கை ஒரு நாள் மாறுமில்ல அப்ப வாங்குவோம் . இப்ப நாம் இந்த கட்டுரையில் ஏ .சி வசதி கொண்ட டிராக்டர்களை பற்றி பார்ப்போம் .




இந்தியாவில் உள்ள முதல் 7 டிராக்டர்களை பார்ப்போம் - Click Here 


விவசாய டிராக்டர் கடன் மற்றும் மானியம் - Click Here 


1 ) மஹிந்திரா அர்ஜூன் நோவோ605 டிஐ-ஐ


இதன் விலை 9.40 முதல் 9.80 லச்சம் வரை ஆகும் . ஏ .சி வசதியுடன் குறைந்த விலையில் மஹிந்திரா கம்பெனியில் மட்டுமே கிடைக்கிறது ஹைட்ராலிக் தூக்கும் வசதி உடையது . அதிக பாசமாக 2,200 கிலோ வரை தூக்கும் வசதி உடையது .


2) சோனாலிகா வோர்ல்ட்டிராக் 90ஆர்எக்ஸ் 4 டபிள்யூடி



இதன் விலை 12.30 முதல் 12.60 லச்சமாகும் இன்லைன் 4 டீசல் என்ஜின் உடையது. சோனாலிகா அதிகபச்சமாக 90 H P  பவரை வெளியேற்றும் திறன் கொண்டது . இந்த டிராக்டரில் உள்ள ஹைட்ராலிக் 2500 கிலோ எடையை சுலபமாக தூக்கிவிடும்.


3) ஜான் டீயர் 5060இ (John Deere 5060 E)



இதன் விலை 13.60 முதல் 14.20 லச்சம் வரை சந்தைகளில் கிடைக்கிறது . இரண்டு மற்றும் நன்கு வீல்கள் இயக்கம் கொண்ட இரு வகைகளில் ட்ராக்டர்கள் கிடைக்கின்றன . 60 HP வெளியேற்றும் திறனும் 2000 கிலோ எடை தூக்கும் திறனும் கொண்டது .


4) ஜான் டீயர் 5065 இ (John Deere 5065 E [4WD])



நன்கு வீல்கள் இயக்கம் கொண்ட இந்த டிராக்டர்கள் 17 முதல் 18 .10 லச்சம் வரை விலையில் கிடைக்கிறது . இந்த டிராக்டரில்  65 எச்பி திறனை வெளியேற்றக்கூடிய 3 சிலிண்டர் டர்போசார்ஜட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2000 கிலோ எடை தூக்கும் திறனும் கொண்டது.


5) ப்ரீத் 9049 ஏசி



AC ட்ராக்டர்களிலேயே அதிகம் விலை உடையது இதுதான் . 20.20 முதல் 22.10 லச்சம் ஆகும் . உழவு , விதைப்பு  மற்றும் அறுவடை என பலவகையான பணிகளை செய்யக்கூடியது . டீசல் என்ஜின் உடையது அதிகமாக 2400 கிலோ எடையை சுலபமாக தூக்கிவிடும் 



Comments

  1. They have restricted worth to the participant, end result of|as a result of} usually a machine may have 8 to 12 totally different possible packages with various payouts. In addition, slight variations of each machine (e.g., with double jackpots or five instances play) are at all times being developed. The on line casino operator can select which EPROM chip to put in in any particular machine to pick out} the payout desired. The result's that there's not likely such a thing as a excessive 1xbet payback type of machine, since each machine potentially has multiple of} settings.

    ReplyDelete
  2. Machines are additionally identified to deliberately put aside cash, which is later awarded in a series of wins, {known as|generally identified as|often identified as} a "streak". The minimum payout share is 70%, 바카라사이트 with pubs often setting the payout at round 78%. Nevada is the only state that has no vital restrictions towards slot machines both for private and non-private use. In New Jersey, slot machines are solely allowed in hotel casinos operated in Atlantic City.

    ReplyDelete

Post a Comment

ஒரு மணி கான வாடகை

*வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள கருவிகளும் அதன் ஒரு மணி கான வாடகை விபரங்களும்*:

ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூபாய் 340/-(டிராக்டர், உபகருவிகள் மற்றும் டீசல் உட்பட)
கீழ்க்கண்ட இயந்திரங்கள்:

1.தென்னை மட்டை தூளாக்கும் கருவி
2.விதைக்கும் கருவி
3.சோளத்தட்டை அறுவடை செய்யும் இயந்திரம்
4.செடிகள் நடும் இயந்திரம்
5.ஒன்பது கொழு கலப்பை
6.ஐந்து கொழு கலப்பை
7.வார்ப்பு இறகு கலப்பை
8.ரோட்டவேட்டர்
9.வைக்கோல் கட்டும் கருவி
10.வைக்கோல் உலர்த்தும் கருவி

பிற இயந்திரங்கள்:

1.மணல் அள்ளும் எந்திரம்/ ஜேசிபி. ரூ.660
2.திரும்பி மண் அள்ளும் இயந்திரம் உருளை பட்டை/ ஹிட்டாச்சி ரூ.1440
3.மண் தள்ளும் இயந்திரம்/புல்டோசர் ரூ.840
4.நெல் அறுவடை இயந்திரம் (சக்கரம்) ரூ. 875
5.நெல் அறுவடை
இயந்திரம்
(ரப்பர் உருளை பட்டை)
ரூ 1415

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் .

வாடகை பணத்தை அலுவலகங்களில் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.

Popular posts from this blog

இந்தியாவில் சிறந்த பவர் டில்லர்ஸ் மற்றும் பவர் டில்லருக்கான SBI வாங்கி கடன் பற்றி பார்ப்போம்

power tiller machine விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வேளைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடியது இந்த பவர் டில்லர்களே . இவை பெருபாலும் மண்ணை நன்றாக உழ மற்றும் களை கட்டுப்படுத்த பயன்படுகிறது . இந்த பவர் டில்லர்கள் மூலம் நல்ல பொடி பொடியாவததுடன் நிலத்திற்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும் . நாம் இந்த கட்டுரையில் சிறந்த பவர் டில்லர்களையும் sbi வங்கி கொடுக்கும் டில்லருக்கான கடன் வசதி பற்றியும் பார்ப்போம் . 1. KMW Mega T15 Deluxe by Kirloskar கிர்லோஸ்கர் நிறுவனத்திலிருந்து பல வகையான பயன்பாட்டிற்காக சந்தைக்கு வந்துள்ள டில்லராகும் . இந்த டில்லர் பலவகையான அம்சங்களை கொண்டது , மொபைல் சார்ஜ் ஏத்தும் வசதி மற்றும் பவர் மீட்டர் உள்ளது. 15 குதிரை திறன் சக்தி கொண்ட இவை பண்ணை மற்றும் மானாவாரி நிலங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் உள்ளது . குறைந்த fuel-லில் அதிக வேலை செய்யக்கூடியது . சிறந்த பிரேக் வசதியும் மெட்டாலிக் கிளட்ச் உடையது . இதில் உள்ள வசதிகள் தனித்துவமானது மற்ற டில்லர்களில் எதிர்பார்க்க முடியாது  2. Honda FJ500 Power Tiller ஹோண்டா நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்ட இந்த பவர் டில்லர்  அனைத்துவிதமான  சாக

களை எடுக்கும் கருவிகள் Part-1

 Weeder Tools Manual  களை நம்மால் தடுக்கவும் முடியாது அதை கட்டுப்படுத்தவும் முடியாது . களைகள் முளைப்பதை மட்டும் நம்மால் ஓரளவுக்கு தள்ளி போடமுடியும் . இயற்கை அல்லது செயற்கை களைக்கொல்லி தெளித்து கட்டுப்படுத்த முடியும் என்றாலும் அதில் நிலம் வளம் இழந்து போக வாய்ப்புள்ளது (இயற்கை களைக்கொல்லியில் வாய்ப்பு குறைவே என்றாலும் அடிக்கடி தெளித்தால் அதன் மூலமும் நிலம் வளம் குறையலாம் )  What's App Group Link - Click Here ஆகவே நீங்கள் களையை கட்டுப்படுத்த எடுக்க வேண்டியது களையெடுக்கும் கருவிகள் அதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம் . களை கட்டுப்பாட்டை மூன்று விதமாக பிரிக்கலாம் விவசாயப்பயிர்கள் , தோட்டக்கலை பயிர்கள் , வீட்டு அல்லது மாடித்தோட்டம் . இந்த மூன்றில் எதற்கு கீழ் நீங்கள் வருவீர்கள் என்று பார்த்து நீங்கள் களை எடுக்கும் கருவிகளை வாங்கலாம் . களை எடுக்கும் கருவிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம்  1) மேனுவல் வீடர்   2) பவர் வீடர்  1) மேனுவல் வீடர் A)  Hand Weeder இந்தவகை வீடர்கள் பெரும்பாலும் வீட்டுத்தோட்டம் அல்லது மாட்டித்தோட்டத்தில் உள்ள களைகளை வேருடன் எடுப்பதற்கு உதவும். உங்கள் லானில் உள