Soil Moisture Meter
நாம் எதற்காக இந்த ஈரப்பதம் கண்டறிவதற்கான கருவி வைத்திருக்கவேண்டும் இந்த கேள்வி கேட்பதற்கு முன் இந்த கருவி எந்தவிதமான பயிர்களுக்கு பயன்படும் பாப்போம் . பொதுவாக விவசாய பயிர்களுக்கு தேவைபடாது ஏன் எனில் நெல் போன்ற பயிர்களை நாம் தண்ணீரில்தான் வைத்திருப்போம் அதுவே மானாவாரி பயிர்களாக இருந்தால் இதன் பயன்பாடு தேவை இருக்கும் .
அடுத்து தோட்டக்கலை பயிர்கள் இதற்கு இந்த கருவி கொஞ்சம் அதிகம் தேவைப்படும் . தென்னை மரத்தை எடுத்து கொண்டால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சோதனை செய்து ஈரப்பததின் அளவை பொறுத்து நீர் விடலாம் . நீங்கள் மாடி தோட்டம் வைத்திருந்தால் இதன் பயன்பாடு மிக உதவியாக இருக்கும் நாம் பெரும்பாலும் பைகளிலோ அல்லது தொட்டிகளிலோதான் வைத்திருப்போம் . தொட்டியில் மேலே காய்ந்து இருந்தாலும் அடியில் ஈரம் இருக்க வாய்ப்புண்டு நீங்கள் அதிகமான நீர் விடும்போது செடிகள் பாதிக்க வாய்ப்புண்டு. எனவே நம்மிடம் இந்த மீட்டர் இருந்தால் உதவியாக இருக்கும் . ஒரு பயிரை பொறுத்தவரை அதன் வேர்பகுதியில்தான் ஈரம் தேவையான அளவு இருக்கவேண்டும் . மேலும் தேவையான அளவு நீர் விடுவதால் ஒரு குறிப்பிட்ட அளவு நீரையும் நம்மால் சேமிக்க முடியும் .
இந்த வகை மீட்டர் ஆன்லைனிலேயே நீங்கள் வாங்கலாம். அமேசான், பிலிப் கார்ட் இணையதளங்களில் வாங்கலாம் 450 ரூபாயிலிருந்து 1500 வரை இருக்கிறது . பெரும்பாலும் அணைத்து ஈரப்பதம் கண்டறிவதற்கான கருவியும் 3-1 ஆக உள்ளன அதில் நீங்கள் மண்ணின் காரா அமிலத்தன்மை மற்றும் வெளிச்சம் அளவும் பார்த்துக்கொள்ளலாம் .
The Wizard of Oz - Casino | Trick To Fame
ReplyDeleteWhen it comes 바셀티비 to classic blackjack you'll see the slot machines you play. At e 스포츠 The 토토사이트 잘못환전 샤오미 Wizard of Oz, 사이트 추천 we present you an all-new blackjack game, 바둑 토토 넷마블