Weeder Tools Power
நம் வயலில் உள்ள களைகளை ஏன் நம்மால் இன்று வரை கட்டுப்படுத்த முடியவில்லை எப்படி அழிக்க அழிக்க முளைத்துக்கொண்டே இருக்கின்றன . இதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் இரண்டு காரணங்களை குறிப்பிட்டு சொல்லலாம் . ஒரு களை செடியின் வாழ் நாள் 3 மாதம் என்று வைத்துக்கொள்வோம் அந்த மூன்று மாதமும் வாழ்ந்து அது மடியும் போது அதன் விதைகளை ஆயிர கணக்கில் பரப்பி இருக்கும் . இது முதல் கரணம் என்றால் இப்படி பரப்பப்படும் விதைகள் எல்லாம் ஒரே நேரத்தில் முளைப்பதில்லை சில விதைகள் உரக்க நிலையில் இருந்து விடுபட 1 மாதம் ஆகலாம் , 1 வருடம் ஆகலாம் 10 வருடம் கூட ஆகலாம் ஏன் சில விதைகள் உரக்க நிலையிலிருந்து விடுபட 100 ஆண்டுகள் கூட எடுத்துக்கொள்ளும் . இதனால்தான் களைகள் நம் நிலத்தில் எப்பொழுதுமே முளைத்து கொண்டிருகின்றன . போன பகுதியில் மேனுவல் வீடர்பற்றி பார்த்தோம் இந்த பகுதியில் பவர் வீடர் பற்றி பார்ப்போம் .
களை எடுக்கும் கருவிகள் Part-1
பவர் வீடர்
இந்தவகை வீடர்கள் பெரிய அளவு உள்ள நிலங்களுக்கு அதிக இடைவெளி உள்ள பயிர்களுக்கு தோட்டக்கலை பயிர்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றனகுறைந்த பச்சம் 5 ஏக்கர் மற்றும் தொடர்ந்து பவர் வீடர்களின் பயன்பாடு உள்ளவர்கள் மட்டும் வாங்குவது நல்லது குறைந்தபச்ச தேவை உள்ளவர்கள் மேனுவல் வீடர் பயன்படுத்தலாம் .
ஸ்டார்ட் அப்
உங்கள் பகுதியில் அதிகம் தேவையிருந்தால் இந்த வீடர்களை வாங்கி வாடகைக்கு விடலாம் இது ஒரு சிறந்த ஸ்டார்ட் அப் அகா இருக்கும் . நகர் புற பகுதிகளில் நிறைய வீடுகளில் லான் வைத்திருகிறார்கள் புற்களை வெட்டவும் களைகளை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தலாம் .
பவர் வீடர் பொறுத்தவரை நிலத்தின் தன்மையை பொறுத்து பிளேடோ அல்லது கலப்பையோ மாறுபடும்
Power Weeder With Rotary Blade
Power Weeder With Chisel Plough
Power Weeder With Single Blade Cultivator
விவசாய டிராக்டர் கடன் மற்றும் மானியம்
Champion 5 HP Power Weeder - price - 39000
Shrachi 75Z Petrol Power Weeder - Price - 64000
AgriPro Mini Tiller APMT52 price - price 10563
Comments
Post a Comment