power tiller machine
விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வேளைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடியது இந்த பவர் டில்லர்களே . இவை பெருபாலும் மண்ணை நன்றாக உழ மற்றும் களை கட்டுப்படுத்த பயன்படுகிறது . இந்த பவர் டில்லர்கள் மூலம் நல்ல பொடி பொடியாவததுடன் நிலத்திற்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும் . நாம் இந்த கட்டுரையில் சிறந்த பவர் டில்லர்களையும் sbi வங்கி கொடுக்கும் டில்லருக்கான கடன் வசதி பற்றியும் பார்ப்போம் .
1. KMW Mega T15 Deluxe by Kirloskar
கிர்லோஸ்கர் நிறுவனத்திலிருந்து பல வகையான பயன்பாட்டிற்காக சந்தைக்கு வந்துள்ள டில்லராகும் . இந்த டில்லர் பலவகையான அம்சங்களை கொண்டது , மொபைல் சார்ஜ் ஏத்தும் வசதி மற்றும் பவர் மீட்டர் உள்ளது. 15 குதிரை திறன் சக்தி கொண்ட இவை பண்ணை மற்றும் மானாவாரி நிலங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் உள்ளது . குறைந்த fuel-லில் அதிக வேலை செய்யக்கூடியது . சிறந்த பிரேக் வசதியும் மெட்டாலிக் கிளட்ச் உடையது . இதில் உள்ள வசதிகள் தனித்துவமானது மற்ற டில்லர்களில் எதிர்பார்க்க முடியாது
2. Honda FJ500 Power Tiller
ஹோண்டா நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்ட இந்த பவர் டில்லர் அனைத்துவிதமான சாகுபடி பயிர்களுக்கும் பயன்படுத்தபடுகிறது . இந்த வகை டில்லர் வறண்ட வகை நிலங்களில் நன்றாக களையை கட்டுப்படுத்துகிறது . குறைவான செலவில் நன்றாக நிலத்தை பண்படுத்த இந்த டில்லர் உகந்தது . நல்ல தரமான ப்ளேடுகளை இந்த டில்லர்கள் பெட்ரோல் பயன்படுத்தும் வண்டியாகவும் , பராமரிப்பு செலவு மிக குறைவாகவும் உள்ளது .
3. Kubota 140DI
குபோட்டா நிறுவனத்தால் அறிமுக படுத்தப்பட்ட இந்த பவர் டில்லர் தொடர்ந்து நிக்காமல் வேலைசெய்யும் மேலும் அதிக திறன் கொண்டது (High RPM ) இதில் உள்ள 80cms அகல ரோட்டரி மண்ணை நன்றாக பொலபொலப்பாக்குகிறது . நல்ல வளைவான பிளேடு இருப்பதால் வறண்ட நிலங்களில் 12 முதல் 15 CM வரை மண்ணை நன்றாக துளைத்துக்கொண்டு செல்லும் . ஈரம் மற்றும் வறண்ட நிலத்திற்கென தனியாக பிளேடு மாற்ற தேவையில்லை
4. Kamco Power Tiller
இந்த டில்லர் பலவிதமான வேலைகளுக்கு பயன்படுத்தலாம் அதில் இந்த டில்லர் பண்ணை சார்ந்த வேலைகளுக்கு முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது . இதனுடைய பாகங்கள் உழுதல் , கலையெடுத்தல் , மற்றும் ஈரம் , வரண்ட நிலங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . சிறந்த டில்லர் வகைகளை தயாரிப்பதில் மட்டும் இந்த நிறுவனம் கடந்த 30 வருடங்களாக இந்த நிறுவனம் முதலிடத்தில் உள்ளது . மேலும் இந்நிறுவனம் நிறைய கார்டன் மற்றும் தோட்டம் பயன்படுத்தும் வகையில் நிறைய பவர் டீலர்களை சந்தைப்படுத்தியுள்ளது
5) VST Shakti 135 DI ULTRA tiller
பலவேறு வேலைகள் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகும் . இதன் மூலம் உழுகலாம் . களை கட்டுப்படுத்தலாம் , கிணற்றில் இருந்து நீர் இறைக்கலாம் , நிலத்தை சமன் செய்யலாம். பின்னால் ட்ரெய்லர் வைத்து 1.5 டன் வரை இழுக்கலாம் மானாவாரி நிலங்களுக்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
பவர் டில்லர் வாங்க sbi வங்கியின் கடன் .
அநேகமாக பவர் டில்லர்ருக்கென தனியாக வங்கிக்கடன் கொடுப்பது SBI யாகத்தான் இருக்கும் .
புது டில்லர் வாங்குபவருக்குத்தான் கடன் கொடுக்கப்படும் .வட்டி விகிதம் MCLR + 2.50% ஒரு வருட வட்டியாகும் . 5 வருடத்திற்குள் கடனை திரும்ப செலுத்தவேண்டும் . இதற்கான கட்டணமாக மொத்த கடனில் இருந்து 0.50+GST உடன் செலுத்த வேண்டும் .
கடன் வாங்குபவர்கள் குழுவாக வாங்கலாம் ஆனால் மூன்று பேருக்கு மேல் இறுக்கக்கூடாது . மேலும் ஒரு ஏக்கர் மா , கொய்யா போன்ற பல ஆண்டுகள் பலன்தரும் பயிர்களாக இருக்க கூடிய நிலத்தை அடமானமாக வைக்க வேண்டும் .அல்லது நில உச்சவரம்பு சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட நீர்ப்பாசன / மானாவாரி ஏக்கர் பரப்பளவு திட்டத்தின் கீழ் கடன் பெறலாம் .
தேவையான டாக்மென்ட்
அட்ரஸ் மற்றும் அடையாளத்திற்காக - பான் கார்டு , ஆதார் அட்டை , பாஸ்போர்ட் போன்றவற்றின் நகல்களை கொடுக்கலாம் . உங்கள் விவசாய நிலத்தையும் டாக்மென்டையும் கொடுக்க வேண்டும்
Comments
Post a Comment