கரும்பில் தாய்குருத்து வெட்டும் கருவி, வாழை நாற்று நடும் கருவி, சிறுதானியங்களைச் சேமிக்கும் கலன்! கோயம்புத்தூரில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், அவ்வப்போது புதிய பண்ணைக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது கரும்பில் தாய் குருத்து வெட்டும் கருவி, வாழை நாற்று நடும் இயந்திரம், சிறுதானியங்களைச் சேமிக்கும் கலன், களையெடுக்கும் கருவி, காற்று உந்துவிசை அடுப்பு ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை, பயன்பாடு உள்ளிட்ட விவரங்கள் குறித்து இங்கு பார்ப்போம். 1. கரும்பில் தாய்க் குருத்து வெட்டும் கருவி தாய்க் குருத்தை வெட்ட இந்தக் கருவி பயன்படுகிறது. இதன் மூலம் சீரான, பருமனான மற்றும் அதிக எண்ணிக்கையிலான கரும்புகள் கிடைக்கும். எளிதாகத் தொழிலாளர்கள் நடந்துகொண்டே கரும்பு தாய்க் குருத்துகளை வெட்ட முடியும். நின்று கொண்டே இந்தக் கருவியை இயக்க முடியும் என்பதால் குனிந்து வேலை செய்ய வேண்டியதில்லை. கருவியின் விலை : ரூ.1,000/- வெட்டும் செலவு : ரூ.465 (ஹெக்டேருக்கு) நேரம் சேமிப்பு : 44% ஆள் செலவ
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை , பண்ணை இயந்திரங்கள் பற்றிய விவரங்கள்