Skip to main content

அக்ரிகல்ச்சர் ட்ரோன்ஸ் Part-1

Agriculture Drones Part 1

கடந்த சில வருடங்களாக  ட்ரோன்களின்  பயன்பாடு விவசாயத்தில் அதிகரித்து வருகிறது . இதற்கு காரணம் என்று பார்த்தால் ஆட்கள் பற்றாக்குறை , நேரம் போன்றவற்றை சொல்லலாம் .


ட்ரோன்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் 


👉 பூச்சி விரட்டிகளை தெளிக்கும்போது , சுழன்று வேகமாக தெளிக்கும் , இதனால் மருந்து இலைகள் மீது  பரவி நீர் துளிகளாக தேங்கி செடியினுள் இறங்கும் 


👉 கை தெளிப்பான் அல்லது மற்ற தெளிப்பான்களை பயன்படுத்தும்போது பூச்சி விரட்டிகள் அதிகம் வீணாகிறது . அதே சமயம் ட்ரோன்ஸ் பயன்படுத்தும்போது கிட்டத்தட்ட முப்பது சதவீதம் வீணாவது தடுக்கப்படுகிறது. இதுவே பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும்போது நிலம் பாதிக்கப்படுவது தடுக்கிறது . மழை பெய்யும்போது அவை நீரில் அடித்து செல்வது குறைகிறது , இதனால் உயிர் சூழ்நிலை பதுக்கப்படுகிறது .


👉 அணைத்து செடிகளுக்கும் ஒரே மாதிரி ஒரே அளவாக தெளிக்கப்படும். இதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அல்லது தடை சென்சார் மூலம் உணரப்பட்டு தெளிப்பது தானாகவே நின்றுவிடும் .


👉 செயல் படுத்துவது மற்றும் பயன்படுத்துவது சுலபமானதாக இருக்கும் 


👉 ட்ரோன்கள் மூலம் நேரம் அதிகம் மிச்சமாகும் . ஒரு நாளைக்கு 40 முதல் 60 ஏக்கர் வரை தெளிக்கமுடியும் . இதை பயன்படுத்தி  தெளிக்கும்போது 40 சதவீதம் வரை அதிகமாக பரவும் . மேலும் ஆட்கள் கூலி , தெளிக்கும் மருந்தின் செலவும் குறையும் .


👉 கை தெளிப்பான் பயன்படுத்தி பூச்சி கொல்லிகள் தெளிப்பதால் பூச்சிக்கொல்லிகள் உடம்பினுள் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது அதுவே ட்ரோன் மூலம் தெளிப்பதால் அது தவிர்க்கப்படுகிறது . மேலும் விவசாயிகள் கடுமையான வெயிலில் வேலை செய்வதால் ஹீட் ஸ்ட்ரோக் வரவாய்ப்புள்ளது அது தவிர்க்கப்படும் 


👉 இறுதியாக ட்ரோன்களை படன்படுத்துவதால் சுற்றுசூழல் பாதுகாக்கப்படுகிறது 


ட்ரோன்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் 


👉 இதனை கையாள்வது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது அல்லது அதை எப்படி பயன்படுத்துவது என்பதை சரியாக அறிய சில காலம் பிடிகின்றது 


👉 மருந்துகள் அடிக்கும் பொழுது இலையின் அடிபாகத்தில் சரியாக படுவதில்லை என கூறப்படுகிறது 


👉 பொதுவாக ட்ரோன்கள் வேகமாக சுழன்று தெளிக்க கூடியவை இதனால் பூக்களுக்கோ அல்லது காய்களுக்கோ உதிர வாய்ப்புள்ளது 


👉 ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும்போது அதன் படிவங்கள் இலையின் மேலே தங்கிவிட வாய்ப்புள்ளது.


                                                                    continue..... 

Comments

  1. ஐயா விலை என்ன எங்கு கிடைக்கிறது.

    ReplyDelete
  2. However there are two additional rules to be aware of|to focus on|to listen to}; En Prison and La Partage. It is extraordinarily onerous for an individual have a look at|to try|to verify out} the wheel and see any relation between the numbers and sectors. That is why it’s virtually unimaginable to notice any bias and wager on a specific sector casino.edu.kg as a result.

    ReplyDelete

Post a Comment

ஒரு மணி கான வாடகை

*வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள கருவிகளும் அதன் ஒரு மணி கான வாடகை விபரங்களும்*:

ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூபாய் 340/-(டிராக்டர், உபகருவிகள் மற்றும் டீசல் உட்பட)
கீழ்க்கண்ட இயந்திரங்கள்:

1.தென்னை மட்டை தூளாக்கும் கருவி
2.விதைக்கும் கருவி
3.சோளத்தட்டை அறுவடை செய்யும் இயந்திரம்
4.செடிகள் நடும் இயந்திரம்
5.ஒன்பது கொழு கலப்பை
6.ஐந்து கொழு கலப்பை
7.வார்ப்பு இறகு கலப்பை
8.ரோட்டவேட்டர்
9.வைக்கோல் கட்டும் கருவி
10.வைக்கோல் உலர்த்தும் கருவி

பிற இயந்திரங்கள்:

1.மணல் அள்ளும் எந்திரம்/ ஜேசிபி. ரூ.660
2.திரும்பி மண் அள்ளும் இயந்திரம் உருளை பட்டை/ ஹிட்டாச்சி ரூ.1440
3.மண் தள்ளும் இயந்திரம்/புல்டோசர் ரூ.840
4.நெல் அறுவடை இயந்திரம் (சக்கரம்) ரூ. 875
5.நெல் அறுவடை
இயந்திரம்
(ரப்பர் உருளை பட்டை)
ரூ 1415

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் .

வாடகை பணத்தை அலுவலகங்களில் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.

Popular posts from this blog

இந்தியாவில் சிறந்த பவர் டில்லர்ஸ் மற்றும் பவர் டில்லருக்கான SBI வாங்கி கடன் பற்றி பார்ப்போம்

power tiller machine விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வேளைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடியது இந்த பவர் டில்லர்களே . இவை பெருபாலும் மண்ணை நன்றாக உழ மற்றும் களை கட்டுப்படுத்த பயன்படுகிறது . இந்த பவர் டில்லர்கள் மூலம் நல்ல பொடி பொடியாவததுடன் நிலத்திற்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும் . நாம் இந்த கட்டுரையில் சிறந்த பவர் டில்லர்களையும் sbi வங்கி கொடுக்கும் டில்லருக்கான கடன் வசதி பற்றியும் பார்ப்போம் . 1. KMW Mega T15 Deluxe by Kirloskar கிர்லோஸ்கர் நிறுவனத்திலிருந்து பல வகையான பயன்பாட்டிற்காக சந்தைக்கு வந்துள்ள டில்லராகும் . இந்த டில்லர் பலவகையான அம்சங்களை கொண்டது , மொபைல் சார்ஜ் ஏத்தும் வசதி மற்றும் பவர் மீட்டர் உள்ளது. 15 குதிரை திறன் சக்தி கொண்ட இவை பண்ணை மற்றும் மானாவாரி நிலங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் உள்ளது . குறைந்த fuel-லில் அதிக வேலை செய்யக்கூடியது . சிறந்த பிரேக் வசதியும் மெட்டாலிக் கிளட்ச் உடையது . இதில் உள்ள வசதிகள் தனித்துவமானது மற்ற டில்லர்களில் எதிர்பார்க்க முடியாது  2. Honda FJ500 Power Tiller ஹோண்டா நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்ட இந்த பவர் டில்லர்  அனைத்துவிதமான  சாக

இந்தியாவில் கிடைக்கும் ஏ .சி வசதியுள்ள டிராக்டர்களை பற்றி பார்ப்போம்

Top Five Aircon Tractors sales Information  சந்தேகமே இல்லாமல் இந்தியா விவசாய நாடு , இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்க கூடியது விவசாயம் . ஆகவே இந்தியாவின் விவசாய சந்தையை மையப்படுத்தி பல்வேறு  டெக்னாலஜி பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு விவசாயம் சார்ந்த வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன அவை பெருமளவு விவசாயிகளின் பணிச்சுமையை குறைத்து வருகின்றன . அதே சமயம் ஒரு சில தயாரிப்புகள் நாம் குளு குளு வேலை பார்ப்பதற்காக தயாரிக்க பட்டுள்ளன . உண்மைதான் சொகுசு கார்களில் இருப்பதுபோல் ட்ராக்டர்களிலும் குளு குளு வசதி வந்துவிட்டது ( 5 லச்ச ரூபாய்க்கு சாதாரண டிராக்டர் வாங்கவே நமக்கு வழியில்லை என்று நீங்கள் நினைப்பது புரிகிறது .) இருந்தாலும் விவசாயிகளின் வாழ்க்கை ஒரு நாள் மாறுமில்ல அப்ப வாங்குவோம் . இப்ப நாம் இந்த கட்டுரையில் ஏ .சி வசதி கொண்ட டிராக்டர்களை பற்றி பார்ப்போம் . இந்தியாவில் உள்ள முதல் 7 டிராக்டர்களை பார்ப்போம் - Click Here   விவசாய டிராக்டர் கடன் மற்றும் மானியம் - Click Here  1 ) மஹிந்திரா அர்ஜூன் நோவோ605 டிஐ-ஐ இதன் விலை 9.40 முதல் 9.80 லச்சம் வரை ஆகும் . ஏ .சி வச

களை எடுக்கும் கருவிகள் Part-1

 Weeder Tools Manual  களை நம்மால் தடுக்கவும் முடியாது அதை கட்டுப்படுத்தவும் முடியாது . களைகள் முளைப்பதை மட்டும் நம்மால் ஓரளவுக்கு தள்ளி போடமுடியும் . இயற்கை அல்லது செயற்கை களைக்கொல்லி தெளித்து கட்டுப்படுத்த முடியும் என்றாலும் அதில் நிலம் வளம் இழந்து போக வாய்ப்புள்ளது (இயற்கை களைக்கொல்லியில் வாய்ப்பு குறைவே என்றாலும் அடிக்கடி தெளித்தால் அதன் மூலமும் நிலம் வளம் குறையலாம் )  What's App Group Link - Click Here ஆகவே நீங்கள் களையை கட்டுப்படுத்த எடுக்க வேண்டியது களையெடுக்கும் கருவிகள் அதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம் . களை கட்டுப்பாட்டை மூன்று விதமாக பிரிக்கலாம் விவசாயப்பயிர்கள் , தோட்டக்கலை பயிர்கள் , வீட்டு அல்லது மாடித்தோட்டம் . இந்த மூன்றில் எதற்கு கீழ் நீங்கள் வருவீர்கள் என்று பார்த்து நீங்கள் களை எடுக்கும் கருவிகளை வாங்கலாம் . களை எடுக்கும் கருவிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம்  1) மேனுவல் வீடர்   2) பவர் வீடர்  1) மேனுவல் வீடர் A)  Hand Weeder இந்தவகை வீடர்கள் பெரும்பாலும் வீட்டுத்தோட்டம் அல்லது மாட்டித்தோட்டத்தில் உள்ள களைகளை வேருடன் எடுப்பதற்கு உதவும். உங்கள் லானில் உள