Skip to main content

இந்தியாவில் உள்ள முதல் 7 டிராக்டர்களை பார்ப்போம்




இந்தியாவில் உள்ள விவசாயத்தை பொறுத்தவரை டிராக்டர் என்பது தவிர்க்க முடியதாகிவிட்டது ,  விவசாயத்தின் பலவிதமான வேலைகளுக்கு தேவைப்படுகிறது . இன்றய தேதியில் நிறைய டிராக்டர் கம்பெனிகள் உள்ளன . (20HP  முதல்  80 HP  வரை )


இதில் நாம் 70 குதிரை திறன் கீழ் இருக்கும் டிராக்டர் மற்றும் கம்பெனிகளை பற்றி பார்ப்போம் 


மஹிந்திரா மற்றும் மஹிந்திரா டிராக்டர்கள்



ஒரு சாதாரண ஆளாக இருந்தாலும் அல்லது விவசாயியாக இருந்தாலும் டிராக்டர் என்றவுடன் முதலில் நினைவுக்கு  வருவது மஹிந்திராதான் .  பல வருடங்களாகளுக்கு  மேலாக விவசாயம் சார்ந்த உபகரணங்களை தயாரித்து வருகிறார்கள் . இந்நிறுவனம் J.C  மஹிந்திரா மற்றும் K.C மஹிந்திராவால்  ஆரம்பிக்கப்பட்டது . மஹிந்திரா இவ்வளவு பிரபலமாக உள்ளதற்கு அதிக செயல்திறன் மற்றும் உழைக்கும் காலம் அதிகமாக இருப்பதால் 


மஹிந்திரா YUVRAJ 215 NXT ( 20HP)


மஹிந்திரா JIVO 245 DI 4WD (21 - 30 HP)


மஹிந்திரா  YUVO 265 DI (31 - 40 HP)


மஹிந்திரா YUVO 475 DI (41 - 50 HP)


மஹிந்திரா 555 Power Plus (50 HP Plus)


TAFE - Tractor and Farm Equipment Ltd




TAFE  நிறுவனத்தை 1960 ல் R. Anantha Ramakrishnan என்பவரால் நிறுவப்பட்டது . இன்று டிராக்டர் விற்பனை செய்வது இரண்டாவது நிறுவனமாக இது திகழ்கிறது . எல்ல வகையான ட்ராக்டர்களும் இந்த நிறுவனத்திடம் இருக்கிறது மற்றும் இங்கே உருவாக்கப்படும் ட்ராக்டர்கள் அனைத்தும் சிறந்த தொழில் நுட்பத்துடன் இருக்கும் .


30 DI Orchard Plus 2WD (30 HP)


5900 DI 2WD (56 - 60 HP)


ஸ்வராஜ் ட்ராக்டர்ஸ் 


Punjab Tractors Limited ஆல்  மொகாலியில் 1972 ல் தொடங்கப்பட்டது . முதன் முதலில் உள் நாட்டிலேயே தயாரித்து விடபட்டது  இந்த ஸ்வராஜ் ட்ராக்டர்ஸ் ஆகும் 2007 லில்  மஹிந்திரா குரூப் இதை வாங்கியதால்  ஸ்வராஜ் டிவிசன்  என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது .

Swaraj 724XM (20 - 30 HP)


Swaraj 834XM (30 - 40 HP)


Swaraj 843XM (40 - 50 HP)


Swaraj 744FE (45 - 50 HP)


Swaraj 960FE (50 - 60 HP)


John Deere tractors


இது இந்தியாவில் மற்றொரு பிரபலமான டிராக்டர் கம்பெனி ஆகும். blacksmith John Deere என்பவரால் 1837லில் தொடங்கப்பட்ட விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் பழைய கம்பெனிகளில் ஒன்றாகும் . இந்த கம்பெனியின் தலைமையகம் புனேவில் உள்ளது .


5036 C 2WD (35 HP)


5050 D 2WD (50 HP)


5310 2WD (55 HP)


Escorts Agri Machinery


இந்த டிராக்டர் கம்பெனி Escorts குழுமத்தால் 1960ல்  Yudi Nanda and H.P.Nanda போன்றவர்களால் தொடங்கப்பட்டது .

Farmtrac XP-37 Champion (XP Series; 37 HP)


Farmtrac 6055 T20 Classic series


Powertrac 434 Plus (DS Series; 37 HP)


Powertrac ALT 3500 (ALT Series; 37 HP)


Ferrari (26 HP)


Steeltrac (12 HP)


சோனாலிகா டிராக்டர்ஸ் 

ஒரு ஒருங்கிணைந்த நிறுவனமாக 1995 ல் உருவானது , இதன் தலைமையகம் ஜலந்தரில் உள்ளது . இந்தியாவில் 3வதாக அதிகம் விற்பனையாகும் டிராக்டர்களில் இதுவும் ஓன்று . இதற்கு முக்கிய கரணம் 3 லச்சத்தில் கூட இதன் டிராக்டர்கள் சந்தையில் உள்ளன .

GT 20 (20 HP)


DI 730 II HDM (31 to 34 HP category)


DI 35 (35 to 45 HP category)


DI 745 III (46 to 55 HP category)


DI 60 (56 HP Plus category)


New Holland

இந்த டிராக்டர் கம்பெனி 1895 ல்  Abe Zimmerman என்பவரால் நிறுவப்பட்டது . இந்தியாவிலிருந்து 70 மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது .


710 with Canopy 2WD (47 HP)



இவை இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஒரு சில டிராக்டர் நிறுவனங்கள், வேறு பல பிராண்டுகளும் உள்ளன.

Comments

ஒரு மணி கான வாடகை

*வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள கருவிகளும் அதன் ஒரு மணி கான வாடகை விபரங்களும்*:

ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூபாய் 340/-(டிராக்டர், உபகருவிகள் மற்றும் டீசல் உட்பட)
கீழ்க்கண்ட இயந்திரங்கள்:

1.தென்னை மட்டை தூளாக்கும் கருவி
2.விதைக்கும் கருவி
3.சோளத்தட்டை அறுவடை செய்யும் இயந்திரம்
4.செடிகள் நடும் இயந்திரம்
5.ஒன்பது கொழு கலப்பை
6.ஐந்து கொழு கலப்பை
7.வார்ப்பு இறகு கலப்பை
8.ரோட்டவேட்டர்
9.வைக்கோல் கட்டும் கருவி
10.வைக்கோல் உலர்த்தும் கருவி

பிற இயந்திரங்கள்:

1.மணல் அள்ளும் எந்திரம்/ ஜேசிபி. ரூ.660
2.திரும்பி மண் அள்ளும் இயந்திரம் உருளை பட்டை/ ஹிட்டாச்சி ரூ.1440
3.மண் தள்ளும் இயந்திரம்/புல்டோசர் ரூ.840
4.நெல் அறுவடை இயந்திரம் (சக்கரம்) ரூ. 875
5.நெல் அறுவடை
இயந்திரம்
(ரப்பர் உருளை பட்டை)
ரூ 1415

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் .

வாடகை பணத்தை அலுவலகங்களில் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.

Popular posts from this blog

இந்தியாவில் சிறந்த பவர் டில்லர்ஸ் மற்றும் பவர் டில்லருக்கான SBI வாங்கி கடன் பற்றி பார்ப்போம்

power tiller machine விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வேளைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடியது இந்த பவர் டில்லர்களே . இவை பெருபாலும் மண்ணை நன்றாக உழ மற்றும் களை கட்டுப்படுத்த பயன்படுகிறது . இந்த பவர் டில்லர்கள் மூலம் நல்ல பொடி பொடியாவததுடன் நிலத்திற்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும் . நாம் இந்த கட்டுரையில் சிறந்த பவர் டில்லர்களையும் sbi வங்கி கொடுக்கும் டில்லருக்கான கடன் வசதி பற்றியும் பார்ப்போம் . 1. KMW Mega T15 Deluxe by Kirloskar கிர்லோஸ்கர் நிறுவனத்திலிருந்து பல வகையான பயன்பாட்டிற்காக சந்தைக்கு வந்துள்ள டில்லராகும் . இந்த டில்லர் பலவகையான அம்சங்களை கொண்டது , மொபைல் சார்ஜ் ஏத்தும் வசதி மற்றும் பவர் மீட்டர் உள்ளது. 15 குதிரை திறன் சக்தி கொண்ட இவை பண்ணை மற்றும் மானாவாரி நிலங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் உள்ளது . குறைந்த fuel-லில் அதிக வேலை செய்யக்கூடியது . சிறந்த பிரேக் வசதியும் மெட்டாலிக் கிளட்ச் உடையது . இதில் உள்ள வசதிகள் தனித்துவமானது மற்ற டில்லர்களில் எதிர்பார்க்க முடியாது  2. Honda FJ500 Power Tiller ஹோண்டா நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்ட இந்த பவர் டில்லர்  அனைத்துவிதமான  சாக

இந்தியாவில் கிடைக்கும் ஏ .சி வசதியுள்ள டிராக்டர்களை பற்றி பார்ப்போம்

Top Five Aircon Tractors sales Information  சந்தேகமே இல்லாமல் இந்தியா விவசாய நாடு , இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்க கூடியது விவசாயம் . ஆகவே இந்தியாவின் விவசாய சந்தையை மையப்படுத்தி பல்வேறு  டெக்னாலஜி பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு விவசாயம் சார்ந்த வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன அவை பெருமளவு விவசாயிகளின் பணிச்சுமையை குறைத்து வருகின்றன . அதே சமயம் ஒரு சில தயாரிப்புகள் நாம் குளு குளு வேலை பார்ப்பதற்காக தயாரிக்க பட்டுள்ளன . உண்மைதான் சொகுசு கார்களில் இருப்பதுபோல் ட்ராக்டர்களிலும் குளு குளு வசதி வந்துவிட்டது ( 5 லச்ச ரூபாய்க்கு சாதாரண டிராக்டர் வாங்கவே நமக்கு வழியில்லை என்று நீங்கள் நினைப்பது புரிகிறது .) இருந்தாலும் விவசாயிகளின் வாழ்க்கை ஒரு நாள் மாறுமில்ல அப்ப வாங்குவோம் . இப்ப நாம் இந்த கட்டுரையில் ஏ .சி வசதி கொண்ட டிராக்டர்களை பற்றி பார்ப்போம் . இந்தியாவில் உள்ள முதல் 7 டிராக்டர்களை பார்ப்போம் - Click Here   விவசாய டிராக்டர் கடன் மற்றும் மானியம் - Click Here  1 ) மஹிந்திரா அர்ஜூன் நோவோ605 டிஐ-ஐ இதன் விலை 9.40 முதல் 9.80 லச்சம் வரை ஆகும் . ஏ .சி வச

களை எடுக்கும் கருவிகள் Part-1

 Weeder Tools Manual  களை நம்மால் தடுக்கவும் முடியாது அதை கட்டுப்படுத்தவும் முடியாது . களைகள் முளைப்பதை மட்டும் நம்மால் ஓரளவுக்கு தள்ளி போடமுடியும் . இயற்கை அல்லது செயற்கை களைக்கொல்லி தெளித்து கட்டுப்படுத்த முடியும் என்றாலும் அதில் நிலம் வளம் இழந்து போக வாய்ப்புள்ளது (இயற்கை களைக்கொல்லியில் வாய்ப்பு குறைவே என்றாலும் அடிக்கடி தெளித்தால் அதன் மூலமும் நிலம் வளம் குறையலாம் )  What's App Group Link - Click Here ஆகவே நீங்கள் களையை கட்டுப்படுத்த எடுக்க வேண்டியது களையெடுக்கும் கருவிகள் அதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம் . களை கட்டுப்பாட்டை மூன்று விதமாக பிரிக்கலாம் விவசாயப்பயிர்கள் , தோட்டக்கலை பயிர்கள் , வீட்டு அல்லது மாடித்தோட்டம் . இந்த மூன்றில் எதற்கு கீழ் நீங்கள் வருவீர்கள் என்று பார்த்து நீங்கள் களை எடுக்கும் கருவிகளை வாங்கலாம் . களை எடுக்கும் கருவிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம்  1) மேனுவல் வீடர்   2) பவர் வீடர்  1) மேனுவல் வீடர் A)  Hand Weeder இந்தவகை வீடர்கள் பெரும்பாலும் வீட்டுத்தோட்டம் அல்லது மாட்டித்தோட்டத்தில் உள்ள களைகளை வேருடன் எடுப்பதற்கு உதவும். உங்கள் லானில் உள