Types of sprayers
இன்றைய விவசாயத்தில் தவிர்க்க முடியாத சொல் ஸ்ப்ரேயர்ஸ் (தெளிப்பான்கள்) ஒரு பூச்சி நோய் கட்டுப்படுத்துவதிலாகட்டும் , இயற்கை இடுபொருட்கள் கொடுப்பதிலாகட்டும் வயல் வெளியாகட்டும் மரங்கள் நிறைந்த தோட்டங்களாக இருந்தாலும் இந்த தெளிப்பான்களின் பங்கு மிக முக்கியமானது . இந்த தெளிப்பான்களை பொறுத்தவரை நிறைய வகைகள் உள்ளன அதிலும் பேட்டரியில் இயங்கக்கூடியவை பெட்ரோல் மற்றும் டீசல் வகை தெளிப்பான்களும் உள்ளன .
நீங்கள் ஒரு ஸ்ப்ரேயர் வாங்க முடிவெடுத்துவிட்டால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன வகையான ஸ்ப்ரேயர்வாங்கவேண்டும் என்பதுதான். நீங்கள் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தால் அதில் தானிய பயிர் செய்தால் அதற்கு பேட்டரி ஸ்ப்ரேயரே போதும் அதுவே 5 ஏக்கராக இருந்தால் பவர் ஸ்ப்ரேயர் தேவைப்படும் அதுவே மா சப்போட்டா போன்ற தோட்டக்கலை பயிராக இருந்தால் ராக்கர் ஸ்ப்ரேயர் பயன் படுத்தலாம்
Agriculture Whats App Group Link
நாப் சாக் ஸ்ப்ரேயர் ( Knapsack sprayer)
இந்தவகை ஸ்ப்ரேயரில் இரண்டு வகை உள்ளது ஓன்று மேனுவல் மற்றொன்று பவர் தெளிப்பான்கள் வீட்டுத்தோட்டம் குறைந்த அளவில் நிலம் வைத்திருப்பவர்கள் மேனுவல் தெளிப்பான்களை பயன்படுத்தலாம் கொஞ்சம் அதிகம் நிலம் உள்ளவர்கள் பவர் தெளிப்பான்களை பயன்படுத்தலாம் . சந்தையில் 12 மற்றும் 16 ,18 லிட்டர் கொள்ளளவு கொண்ட தெளிப்பான்கள் உள்ளன . தற்சமயம் மேனுவல் கம் பவர் தெளிப்பான்கள் கூட சந்தையில் உள்ளன . ஆரம்ப விலை 2000 இருந்து உள்ளன .
போர்ட்டபில் பவர் ஸ்ப்ரேயர்
இந்தவகை தெளிப்பான்கள் அதிகம் பழத்தோட்டங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது . இதில் மற்றவை போன்று டேங்க் இருக்காது . இதற்காக நாம் 100 அல்லது 200 லிட்டர் தெளிப்பான்கள் வாங்கி வைத்துக்கொள்ளலாம் . பெரும்பாலும் பெட்ரோல் பயன்படுத்தும் தெளிப்பான்களாகவே இருக்கும் . தற்சமயம் 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட டான்கோடு இந்தவகை தெளிப்பான்கள் கிடைக்கின்றன .
டேங்க் இல்லாமல் 6 ரூபாயில் இருந்து உள்ளன டேங்க் வேண்டுமென்றால் 19 ஆயிரம் முதல் சந்தையில் உள்ளன .
நாப்சாக் பவர் ஸ்ப்ரேயர்
2 அல்லது 4 ஸ்ட்ரோக் என்ஜின் உள்ளது 20 , 25 லிட்டர் கொள்ளளவு கொண்டது . மொத எடை கொள்ளளவு பொறுத்து 9 அல்லது 10 கிலோ இருக்கும்
2 ஸ்ட்ரோக் என்ஜின் 8000 தில் இருந்தும் 4 ஸ்ட்ரோக் என்ஜின் 11000 தில் இருந்தும் சந்தைகளில் இருந்தும் கிடைக்கின்றன
மிஸ்ட் பவர் ஸ்ப்ரேயர்
நாம் கொடுக்க வேண்டிய பொருட்களை மிஸ்ட் பார்மில் கொடுப்பதற்கு பயன்படும் சில சமயங்களில் குருணை வடிவத்திலும் பயிர்களுக்கு அளிக்கலாம் .சந்தைகளில் 8500 ரூபாயிலிருந்து கிடைக்கிறது
ஹான்ட் ஸ்ப்ரேயர்
இந்தவகை தெளிப்பான்களை உங்கள் சிறு வீட்டு தோட்டம் அல்லது சிறு தொட்டிச்செடிகளுக்கு நீர் தெளிக்க வைத்து கொள்ளலாம்
G.M
Smart Vivasayi
What's App Me +919003395600
Comments
Post a Comment