தரமான மற்றும் விலை குறைந்த அணைத்து விதமான விவசாய தேவைகளுக்கு பயன்படக்கூடிய மினி டிராக்டர்ஸ் பற்றி பார்ப்போம்
Best Mini tractors and price
100க்கும் மேற்பட்ட விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த வாட்ஸ்அப் குரூப் - Click Here
கொரோன அணைத்து விதமான மக்களிடையேயும் வாழ்வாதாரத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது . இரண்டு ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயி ஆகட்டும் பல ஏக்கர் வைத்திருக்கும் பெரு விவசாயி ஆகட்டும் அனைவருமே இந்த கொரோனவால் பொருளாதார ரீதியாக பெரிய பாதிப்பு அடைந்துள்ளனர் . இந்த சூழ்நிலையில் அரசாங்கமும் மற்ற தனியார் நிறுவனங்களும் விவசாயிகளுக்கு உதவ முன் வந்துள்ளன . அரசாங்கம் விவசாயிகளுக்காக பல திட்டங்களை செயல் படுத்திக்கொண்டிருக்கிறது . பல பெரிய நிறுவனங்களும் உதாரணமாக TAFE , சிறு ஏழை விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுவதற்கு இலவசமாக வழங்குகிறது . இன்றய காலகட்டத்தில் டிராக்டர் இல்லாமல் விவசாய வேலைகள் இருக்காது .
விவசாயிகளின் தேவைகளை பொறுத்து நிறைய நிறுவனங்கள் பலவிதமான டிராக்டர்களை சந்தைப்படுத்தியுள்ளன . இதே போல் அணைத்து விதமான விவசாய தேவைகளுக்கு மினி டிராக்டர்களை அறிமுக படுத்தியுள்ளது அவை குறைந்த விலையிலும் உள்ளன அவற்றை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்
1. Yuvraj-215 NXT
இந்த மினி டிராக்டர் மகேந்திரா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும் . இந்தியாவின் முதல் 15 பவர் உடைய டிராக்டராகும் . நல்ல தரமுடையது . பயிர்களுக்கிடையே சுலபமாக வேலை செய்யக்கூடியது . நல்ல நேர்த்தியான சதுர வடிவமைப்பை கொண்டது . இந்த வகை மினி ட்ராக்ட்ர்கள் பழங்கள் ,காய்கறிகள் ,தோட்டங்களில் வேலை செய்வதற்காகவே வடிவைமைக்கப்பட்டுள்ளது (உதாரணமாக உருளை , வெங்காயம் , பருத்தி , கரும்பு,ஆப்பிள் , மாம்பழம் , ஆரஞ்சு )
இதன் விலை 2.50 முதல் 2.75 வரை ஆகும்
2. Mahindra Jivo 245DI
எல்லா வகையான விவசாய பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டதாகும் . குறைந்த பராமரிப்பு அதிக மைலேஜ் தரக்கூடியதாகும் .தரமான மெட்டல் பாடி உடையது பல்வேறு வகையான பொருட்களை அதிகபச்சமாக 775 கிலோ வரை இழுத்துச்செல்லும் .
இதன் விலை 3.90 முதல் 4.05 லச்சம் வரை ஆகும்
3. Swaraj 717
விலை குறைவு நல்ல தரம் என்றால் இந்த மினி ட்ராக்ட்டர்களை வாங்கலாம் 15 குதிரை சக்தி கொண்ட இது 780 கிலோ வரை தூக்கும் திறன் கொண்டது .
இதன் விலை 2.60 முதல் 2.80 லச்சம் வரை ஆகும் .
Comments
Post a Comment