Skip to main content

இயற்கை விவசாயத்தில் இனக்கவர்ச்சி பொறிகளின் பங்கு

 insect trap for agriculture



இயற்கை விவசாயத்தில் பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பூச்சி பொறிகளே, இதை நம் வயலில் சரியான நேரத்தில் கையாண்டாலே பயிர்களில் 60 சதவீத தாக்கத்தை கட்டுப்படுத்தி விடலாம் . பூச்சியை  அழிக்கும் அல்லது பயிர்களை தாக்காமல் கவர்ந்து இழுப்பதற்கு இரண்டு முறைகள் உள்ளன ஓன்று  உயிரியல் முறை இது  இனக்கவர்ச்சி பயிர்களை ஊடு பயிராகவோ அல்லது வரப்பு ஓரங்களில் நட்டு முக்கிய பயிர்களை தாக்காமல் கவர்ந்து இழுப்பது . அடுத்தது கவர்ச்சி பொறிகள் வைத்து பூச்சிகளை கவர்ந்து இழுத்து அழிப்பது . நாம் இந்த கட்டுரையில்  பூச்சிகளை கட்டுப்படுத்த என்ன வகையான பொறிகள்  உள்ளன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம் 


இந்த பொறிகளை பொறுத்தவரை நான்கு விதமா பிரிச்சுக்கலாம் 


1) நாமே தயாரிக்கும் பொறிகள் 

2) ஓட்டும் அட்டைகள் 

3) கவர்ச்சி பொறிகள் 

4) விளக்கு பொறிகள் 


1) நாமே தயாரிக்கும் பொறிகள்



சில பூச்சிகளை கட்டுப்படுத்த மரபு வழி முறையை பயன்படுத்தி தயாரிப்பது உதாரணமாக காண்டாமிருக வண்டை கவர்ந்து இழுக்க கருவாட்டு பொறி , பழங்கள் மற்றும்  பந்தல் காய்கறிகளை தாக்கும் பழ ஈக்களை  அழிக்கும் பழ ஈ பொறி போன்றவற்றை சொல்லலாம்.


2) ஓட்டும் அட்டைகள் - insect traps sticky 




ஓட்டும் அட்டைகளை பொறுத்தவரை சிரியவகை அந்த பூச்சிகளை கவர்ந்து இழுத்து அழிப்பதில் பெரும் பங்கு உள்ளது  இந்த ஓட்டும் அட்டைகளில் பொதுவாக இரண்டு வண்ணங்கள் உள்ளன  மஞ்சள் வண்ணம் அட்டை இவை Whiteflies, Green Plant Hopper, Aphids, Thrips ,Leaf Minor,Thrips போன்ற பூச்சிகளையும் அவற்றால் எற்படும் வைரஸ் நோய்களையும் கட்டுப்படுத்தும்  . தென்னையை தாக்கும் ருகோஸ் பூச்சியை  இந்த பெரியவகை மஞ்சள் ஷீட் கட்டுப்படுத்தும். அடுத்தது நீலவண்ண ஓட்டும் அட்டை பூச்சிகளை பொறுத்தவரை மஞ்சள் நிறத்திற்கு பின்பு நீல நிறம்தான் அதிகம் கவர்ந்து இழுக்கும் இதுவும் மேல் சொன்ன பூச்சிகளை கவர்ந்து அளிக்கும் .


3) இனக்கவர்ச்சி பொறிகள்  Insect phermone traps 


இயற்கை விவசாயத்தில் பூச்சிகளை பெருமளவு கட்டுப்படுத்துவது இந்த வகை பொறிகளே . பெண் பூச்சிகள் ஆண்பூச்சிகளை கவர்ந்து இழுக்க வாசனை திரவங்களை வெளியிடும் அந்த திரவங்களை பயன்படுத்தி ஆண் பூச்சிகளை கவர்ந்து அளிக்கலாம் ஓவுவொரு பூச்சிக்கும் ஒருவிதமான திரவம் இருக்கும். உதாரணமாக காண்டாமிருக வண்டில் ஆண் பூச்சி பெண் பூச்சி வெவ்வேறு திரவங்களை சுரக்கும் அவற்றை வைத்து வண்டினை அழிக்கலாம் . இந்த திரவங்கள் சந்தைகளில் அல்லது ஆன்லைனில் வாங்க முடியும் 

இந்த இனக்கவர்ச்சி பொறிகளில் பலவகை உள்ளன 


A) வாளி வகை இனக்கவர்ச்சி பொறி 


இந்தவகை பொறிகள் காண்டாமிருக வந்து சிவப்பு கூன் வண்டு போன்றவற்றை கட்டுப்படுத்த பயன்படுகிறது  பொதுவாக இந்தவகை இனக்கவர்ச்சி பொறிகள் தென்னை மரங்கள் உள்ள பகுதிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன 


b) புனல் வடிவ இனக்கவர்ச்சி பொறி 



இந்தவகை பொறிகள் காய்கறி பயிர்களை தாக்கும் பூச்சிகளை , புழுக்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன அமெரிக்கன் காய்ப்புழு , தக்காளி பழதுளைப்பான் , நெல் தண்டு துளைப்பான் , பயறுவகை காய்துளைப்பான் இப்படி காய்கறிகள் மற்றும் பந்தல் காய்கறிகளை தாக்கும் பூச்சிகளை கவர்ந்து அளிக்கும் . ஒரு ஏக்கருக்கு 4 முதல் 6 வைக்கலாம் . வைக்கும்போது உங்கள் பயிர்களில் இருந்து ஒரு அடி உயரத்தில் இருக்குமாறு வைக்கவேண்டும் .


c) குடுவை வகை இனக்கவர்ச்சி பொறிகள் 



இந்த வகை கவர்ச்சி பொறிகள் பெரும்பாலும் பழத்தோட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன கொய்யா , பப்பாளி , மாமரம் இதை தவிர்த்து பந்தல் வகை காய்கறி பயிர்களுக்கும் இந்த கவர்ச்சி பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன . குறிப்பாக பழ ஈக்களை இந்த பொறிகள் கட்டுப்படுத்தும்.

 

4) விளக்கு பொறிகள் - Solar light traps 



இந்தவகை பொறிகள் அணைத்து விதமான பயிர்கள் தோட்டக்கலை பயிர்கள் தானிய வகை பயிர்கள் எல்லாவற்றிக்கும் பயன்படுத்தலாம் பறக்கும் பூச்சிகள் குறிப்பாக தீமை செய்யும் பூச்சிகள் மாலை வேலைகளில்தான் அதிகம் பறக்கும் அவற்றை வெளிச்சத்தின் மூலம் கவர்ந்து இழுத்து அழிப்பதுதான் இந்த விளக்கு பொறிகள் இந்த விளக்கு பொறிகள் இரண்டு வகைதான் ஓன்று பாட்டரி அல்லது கரண்ட் மூலம் இயங்குபவை  அடுத்தது சோலார்  மூலம் இயங்கும் விளக்கு பொறி இயங்குபவை இந்த சோலார் வகை பொறிகள் கொஞ்சம் விலை அதிகம் என்றாலும் குறைந்தது 6 அல்லது 7 வருடங்களுக்கு நல்ல பலன் கொடுக்கும் . தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்த  மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணிவரை மட்டுமே  எரிய  விட வேண்டும் அதற்க்கு மேல் இருந்தால் நன்மை செய்யும் பூச்சிகளும் பாதிக்கப்படும்


G.M





Comments

  1. sbc kode - 嵌지노 사이트, 88888
    sbc 우리카지노 kode kirill-kondrashin - 嵌지노 사이트, 88888.com. SBC KHODE. SBC KODE.

    ReplyDelete
  2. That’s why avid gamers should think about future withdrawals at the preliminary stage. However, a gaming platform always takes casino.edu.kg a sure share of cash deposited by punters . SGHC’s flagship brand, Betway, operates as a world, on-line, sports-led betting brand that is consistently positioned in all markets.

    ReplyDelete

Post a Comment

ஒரு மணி கான வாடகை

*வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள கருவிகளும் அதன் ஒரு மணி கான வாடகை விபரங்களும்*:

ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூபாய் 340/-(டிராக்டர், உபகருவிகள் மற்றும் டீசல் உட்பட)
கீழ்க்கண்ட இயந்திரங்கள்:

1.தென்னை மட்டை தூளாக்கும் கருவி
2.விதைக்கும் கருவி
3.சோளத்தட்டை அறுவடை செய்யும் இயந்திரம்
4.செடிகள் நடும் இயந்திரம்
5.ஒன்பது கொழு கலப்பை
6.ஐந்து கொழு கலப்பை
7.வார்ப்பு இறகு கலப்பை
8.ரோட்டவேட்டர்
9.வைக்கோல் கட்டும் கருவி
10.வைக்கோல் உலர்த்தும் கருவி

பிற இயந்திரங்கள்:

1.மணல் அள்ளும் எந்திரம்/ ஜேசிபி. ரூ.660
2.திரும்பி மண் அள்ளும் இயந்திரம் உருளை பட்டை/ ஹிட்டாச்சி ரூ.1440
3.மண் தள்ளும் இயந்திரம்/புல்டோசர் ரூ.840
4.நெல் அறுவடை இயந்திரம் (சக்கரம்) ரூ. 875
5.நெல் அறுவடை
இயந்திரம்
(ரப்பர் உருளை பட்டை)
ரூ 1415

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் .

வாடகை பணத்தை அலுவலகங்களில் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.

Popular posts from this blog

இந்தியாவில் சிறந்த பவர் டில்லர்ஸ் மற்றும் பவர் டில்லருக்கான SBI வாங்கி கடன் பற்றி பார்ப்போம்

power tiller machine விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வேளைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடியது இந்த பவர் டில்லர்களே . இவை பெருபாலும் மண்ணை நன்றாக உழ மற்றும் களை கட்டுப்படுத்த பயன்படுகிறது . இந்த பவர் டில்லர்கள் மூலம் நல்ல பொடி பொடியாவததுடன் நிலத்திற்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும் . நாம் இந்த கட்டுரையில் சிறந்த பவர் டில்லர்களையும் sbi வங்கி கொடுக்கும் டில்லருக்கான கடன் வசதி பற்றியும் பார்ப்போம் . 1. KMW Mega T15 Deluxe by Kirloskar கிர்லோஸ்கர் நிறுவனத்திலிருந்து பல வகையான பயன்பாட்டிற்காக சந்தைக்கு வந்துள்ள டில்லராகும் . இந்த டில்லர் பலவகையான அம்சங்களை கொண்டது , மொபைல் சார்ஜ் ஏத்தும் வசதி மற்றும் பவர் மீட்டர் உள்ளது. 15 குதிரை திறன் சக்தி கொண்ட இவை பண்ணை மற்றும் மானாவாரி நிலங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் உள்ளது . குறைந்த fuel-லில் அதிக வேலை செய்யக்கூடியது . சிறந்த பிரேக் வசதியும் மெட்டாலிக் கிளட்ச் உடையது . இதில் உள்ள வசதிகள் தனித்துவமானது மற்ற டில்லர்களில் எதிர்பார்க்க முடியாது  2. Honda FJ500 Power Tiller ஹோண்டா நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்ட இந்த பவர் டில்லர்  அனைத்துவிதமான  சாக

இந்தியாவில் கிடைக்கும் ஏ .சி வசதியுள்ள டிராக்டர்களை பற்றி பார்ப்போம்

Top Five Aircon Tractors sales Information  சந்தேகமே இல்லாமல் இந்தியா விவசாய நாடு , இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்க கூடியது விவசாயம் . ஆகவே இந்தியாவின் விவசாய சந்தையை மையப்படுத்தி பல்வேறு  டெக்னாலஜி பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு விவசாயம் சார்ந்த வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன அவை பெருமளவு விவசாயிகளின் பணிச்சுமையை குறைத்து வருகின்றன . அதே சமயம் ஒரு சில தயாரிப்புகள் நாம் குளு குளு வேலை பார்ப்பதற்காக தயாரிக்க பட்டுள்ளன . உண்மைதான் சொகுசு கார்களில் இருப்பதுபோல் ட்ராக்டர்களிலும் குளு குளு வசதி வந்துவிட்டது ( 5 லச்ச ரூபாய்க்கு சாதாரண டிராக்டர் வாங்கவே நமக்கு வழியில்லை என்று நீங்கள் நினைப்பது புரிகிறது .) இருந்தாலும் விவசாயிகளின் வாழ்க்கை ஒரு நாள் மாறுமில்ல அப்ப வாங்குவோம் . இப்ப நாம் இந்த கட்டுரையில் ஏ .சி வசதி கொண்ட டிராக்டர்களை பற்றி பார்ப்போம் . இந்தியாவில் உள்ள முதல் 7 டிராக்டர்களை பார்ப்போம் - Click Here   விவசாய டிராக்டர் கடன் மற்றும் மானியம் - Click Here  1 ) மஹிந்திரா அர்ஜூன் நோவோ605 டிஐ-ஐ இதன் விலை 9.40 முதல் 9.80 லச்சம் வரை ஆகும் . ஏ .சி வச

களை எடுக்கும் கருவிகள் Part-1

 Weeder Tools Manual  களை நம்மால் தடுக்கவும் முடியாது அதை கட்டுப்படுத்தவும் முடியாது . களைகள் முளைப்பதை மட்டும் நம்மால் ஓரளவுக்கு தள்ளி போடமுடியும் . இயற்கை அல்லது செயற்கை களைக்கொல்லி தெளித்து கட்டுப்படுத்த முடியும் என்றாலும் அதில் நிலம் வளம் இழந்து போக வாய்ப்புள்ளது (இயற்கை களைக்கொல்லியில் வாய்ப்பு குறைவே என்றாலும் அடிக்கடி தெளித்தால் அதன் மூலமும் நிலம் வளம் குறையலாம் )  What's App Group Link - Click Here ஆகவே நீங்கள் களையை கட்டுப்படுத்த எடுக்க வேண்டியது களையெடுக்கும் கருவிகள் அதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம் . களை கட்டுப்பாட்டை மூன்று விதமாக பிரிக்கலாம் விவசாயப்பயிர்கள் , தோட்டக்கலை பயிர்கள் , வீட்டு அல்லது மாடித்தோட்டம் . இந்த மூன்றில் எதற்கு கீழ் நீங்கள் வருவீர்கள் என்று பார்த்து நீங்கள் களை எடுக்கும் கருவிகளை வாங்கலாம் . களை எடுக்கும் கருவிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம்  1) மேனுவல் வீடர்   2) பவர் வீடர்  1) மேனுவல் வீடர் A)  Hand Weeder இந்தவகை வீடர்கள் பெரும்பாலும் வீட்டுத்தோட்டம் அல்லது மாட்டித்தோட்டத்தில் உள்ள களைகளை வேருடன் எடுப்பதற்கு உதவும். உங்கள் லானில் உள